Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇனி தெரு நாய்களுக்கு சோறு வைத்தால் 'உங்க கதி அதோகதிதான்'! - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

    இனி தெரு நாய்களுக்கு சோறு வைத்தால் ‘உங்க கதி அதோகதிதான்’! – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

    பொதுமக்களை தெருநாய்கள் கடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் , இழப்புகளுக்கும் அந்த நாய்களுக்கு உணவளித்த நபரே பொறுப்பேற்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.வி.கே.பிஜு என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கேரளா மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துவிட்டதாகவும், அது பொதுமக்களை கடிப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவானது வெள்ளிக்கிழமை அன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

    இதையும் படிங்க: பொரியலில் எலி தலை விவகாரம்! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை..

    அப்பொழுது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். அதில் இந்தியா முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 1.5 கோடி புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் உத்திர பிரதேச மாநிலம் முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது. கேரளா மாநிலத்திலும் இதே நிலை தான். கடந்த 2015 ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரிவர பின்பற்றப்படுவதில்லை. மேலும் நாய்களுக்கு செலுத்தப்படும் தடுப்பு ஊசி சரிவர செயல்படுவதில்லை. எனவே அந்த மருந்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிற்கு வேண்டுகோளும் வைக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று வாதிட்டார் .

    மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், அனைத்து மாநில அரசுகளுக்கும் பொருந்தும்படி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அந்த உத்தரவில் தெருநாய்கள் பொதுமக்களை கடித்தால், அதற்கு அந்த நாய்களுக்கு உணவளிக்கும் நபரே பொறுப்பேற்கவேண்டும், அப்படி பொறுப்பேற்காத பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த உத்தரவு சரியாக பின்பற்றப்படுகிறதா என்று அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்யவேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளனர் .

    பேருந்து ஸ்டிக்கரை தாய் என நினைத்து துரத்திய ‘குதிரை குட்டி’ – மனதை கரைய வைக்கும் காணொளி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....