Saturday, March 16, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்பேருந்து ஸ்டிக்கரை தாய் என நினைத்து துரத்திய 'குதிரை குட்டி' - மனதை கரைய வைக்கும்...

    பேருந்து ஸ்டிக்கரை தாய் என நினைத்து துரத்திய ‘குதிரை குட்டி’ – மனதை கரைய வைக்கும் காணொளி

    கோவையில் பேருந்தில் உள்ள படத்தை பார்த்து துரத்தி சென்ற குதிரையின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 

    கோவையில் பேருந்தின் பக்கவாட்டில் ஒட்டப்பட்டிருக்கும் குதிரை ஸ்டிக்கரைப் பார்த்த குட்டி குதிரை ஒன்று நீண்ட தூரம் அந்தப்பேருந்தின்  பின்னாடியே ஓடிச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது. 

    கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள தர்ப்பண மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித் திரிவது வழக்கம். 

    அப்படி ஒரு குதிரையின் தாய், அதைப் பிரிந்து வேறொரு இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் , தாயை காணாமல் குதிரை குட்டி தவித்து வந்ததுள்ளது. இந்நிலையில் , பேருந்தில் ஒட்டப்பட்டிருக்கும் குதிரை ஸ்டிக்கரை தனது தாய் என நினைத்த அந்தக் குட்டி குதிரை, பேருந்து செல்ல செல்ல அதை துரத்திக் கொண்டே ஓடிச் செல்கிறது. 

    இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ‘தாய் பாசம் உயிர்ப்பாசம்’ என நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பொரியலில் எலி தலை விவகாரம்! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....