Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தொடரும் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை - கடுப்பில் முன்னாள் அமைச்சர்கள்

    தொடரும் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை – கடுப்பில் முன்னாள் அமைச்சர்கள்

    கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவரின் வீட்டு முன்பு திரண்ட ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.சி வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொண்டனர். 

    இந்நிலையில், இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

    மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகளுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார். 

    இது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

    ஒரே நேரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்புடைய 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சோதனையில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

    மேலும் இந்தச் சோதனையினால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதாரவாளர்கள் அவரின் வீட்டின் முன்பு கூடினர். இதனால், காவல்துறையினருக்கும் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதையும் படிங்க: 3-ம் வகுப்புக்கே நுழைவுத் தேர்வா? கொந்தளிக்கும் அமைச்சர் பொன்முடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....