Saturday, March 16, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்எடப்பாடி ஏரியாவிற்கே 'விசிட்' போன சசிகலா.. தொண்டர்களை ஒன்று திரட்ட அடுத்த முயற்சி

  எடப்பாடி ஏரியாவிற்கே ‘விசிட்’ போன சசிகலா.. தொண்டர்களை ஒன்று திரட்ட அடுத்த முயற்சி

  ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆட்சியை காப்பாற்ற கழக நிர்வாகியை முதல்வர் (பழனிசாமி) ஆக்கினேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

  சேலம் மாவட்டத்துக்கு வி.கே.சசிகலா பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் வந்த வேனில் இருந்தபடியே பேசியதாவது:

  சேலம் மாவட்டத்தில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த அதிமுக ஆட்சிக்காலம் தான் மக்களுக்கான ஆட்சியாகவும், பொற்காலமாகவும் இருந்தது. அவர்கள்தான் சத்துணவு திட்டம், மகளிர்க்கான திட்டம்  என எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

  மேலும், 69% சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயலலிதா. இறுதி மூச்சு வரை மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தார். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினாலே தமிழகம் முன்னேற்றம் பெறும்.

  எந்த ஒரு சூழ்நிலையிலும் எவ்வளவு வேற்றுமை இருந்தாலும் அவற்றை சரி செய்து தொடர்ந்து இயக்கத்தை வலுபடுத்தாமல் ஓயமாட்டேன். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் இக்கட்டான சூழ்நிலையில் அதிமுகவை மீட்டுள்ளோம். அதனால், அந்தக் காலத்தில் நடந்ததை நிர்வாகிகள் நினைத்து பார்த்தால் தற்போதைய பிரச்சனை சரியாகிவிடும். 

  மேலும், 2024-ல் அனைவரும் ஒன்றுபட்டு சிறப்பான வெற்றி பெறுவோம். என் அக்கா (ஜெயலலிதா) என் அருகிலிருந்து நடப்பவை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறார். திமுகவினர் அதிமுகவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். திமுகவிற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக தான் பொறுமையாக இருக்கிறேன். 

  எம்.ஜி.ஆர், காலம் முதல் கொங்கு பகுதியை சேர்ந்தவர்கள், அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். இன்றளவும், கொங்கு பகுதிக்கு அதிமுக முக்கியத்துவம் அளிக்கிறது . அதனால் தான், ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆட்சியை காப்பாற்ற உங்கள் பகுதியை சேர்ந்த கழக நிர்வாகியை முதல்வர் (பழனிசாமி) ஆக்கினேன். இன்றைய யாதார்த்த நிலையை கழக நிர்வாகிகள் புரிந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 

  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவை யாக இருக்கட்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்ற வில்லை. மேடையில் மட்டும் செய்தது போன்று வசனங்கள் பேசி வருகின்றனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. மாநகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. திரைப்படத்துறையில் ஆளும் கட்சியினர், குடும்பத்தினர் தலையீடு அதிகரித்து, கபளீகரம் செய்துள்ளது. கல்லூரி, பள்ளிகள் பகுதியில் போதை பொருள் அதிகரித்துள்ளது.

  மேட்டூர்-காவிரி உபரி நீரை, வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும். ராமநாயக்கன்பாளையம் கல்லாற்றில் அணை கட்டவேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் கொஞ்சம் நாள் பொறுத்திருங்கள், அதிமுக ஆட்சிக்கு வந்த பின் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். நிர்வாகிகள் தொண்டர்களை மனதில் வைத்து ஒன்றுமையாக செயல்படுங்கள். 

  இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....