Sunday, March 17, 2024
மேலும்
  Homeசெய்திகள்உலகம்கண்னை கவரும் பிலிப்பைன்ஸ் திருநங்கை!

  கண்னை கவரும் பிலிப்பைன்ஸ் திருநங்கை!

  திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டியில் பிலிப்பைன்ஸ் அழகி வெற்றி பெற்றுள்ளார்.

  திருநங்கைகளுக்கான உலகின் மிகப்பெரிய அழகிப் போட்டியான இன்டர்நேஷனல் குயின் 2022 -ன் வெற்றியாளராக பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி ஃபுஷியா அன்னே ரவேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  பிலிப்பைன்ஸில் உள்ள செபு மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது தொழில்முனைவரான இவர், கடந்த சனிக்கிழமை தாய்லாந்தின் பட்டாயாவில் தொலைக்காட்சியின் வழியே நடந்த இறுதிப்போட்டியின் போது கிரீடத்தை வென்றார்.

  2004 இல் தொடங்கப்பட்ட மிஸ் இன்டர்நேஷனல் குயின், திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியாகும். இது வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2021 இல் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு நிகழ்வு பெருமை (பிரைட்) மாதத்துடன் ஒத்துப்போகும் வகையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வு “ஒன்றாக இருப்பது பெருமை” என்ற கருப்பொருளில் நிகழ்ந்தது.

  போட்டியில் பங்கேற்ற 23 போட்டியாளர்களில் ரவேனாவும் இருந்தார், கொலம்பியாவின் ஜாஸ்மின் ஜிமெனெஸ் மற்றும் பிரான்சின் ஏலா சேனல் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். சிஎன்என் துணை நிறுவனமான சிஎன்என் பிலிப்பைன்ஸின் கூற்றுப்படி, பட்டத்தை வென்ற மூன்றாவது பிலிப்பைனா இவர் ஆவார்.

  தாய்லாந்து தொலைக்காட்சியில் சனிக்கிழமை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இறுதிப்போட்டியில், போட்டியாளர்கள் அந்தந்த நாடுகளில் இருந்து மாலை கவுன்கள் மற்றும் தேசிய உடைகளில் மேடையில் ஏறினர். ஒரு கேள்வி-பதில் பிரிவில், ஒரு திருநங்கை அழகு ராணியாக இருப்பதன் குறிக்கோள் “மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்று ரவீனா கூறினார்.

  “ஒரு மனிதனாக இருப்பதற்கும் திருநங்கையாக இருப்பதற்கும் மிக அழகான சொத்து என்பது அறிவு நிறைந்த ஒரு தலை மட்டுமல்ல – (அது) அன்பும் மரியாதையும் நிறைந்த இதயமாக இருக்க வேண்டும், கேட்கத் தயாராக இருக்கும் காது மற்றும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருக்கும் கைகள்,” என்று அவர் மேடையில் கூறினார்.பின்னர் வெற்றியை தனது தாய்க்கு அர்ப்பணித்தார்.

  நிகழ்ச்சிக்கு முன்னதாக போட்டி அமைப்பாளர்களால் வெளியிடப்பட்ட வீடியோவில், ரவேனா தனது பாலின மாற்றம் “எளிதாக இல்லை” என்று கூறிய அவர், எனது சொந்த வீட்டில் ஏற்றுக்கொண்டது நான் பெற்ற சிறந்த பரிசு” என்றார்.

  சமத்துவத்துக்கான போராட்டத்தில் டிரான்ஸ் சமூகம் இன்னும்  செல்ல வேண்டியுள்ளது” என்று வீடியோவில் ரவீனா கூறினார். ” இந்த வாய்ப்பை அதிகப்படுத்தி என்னால் முடிந்தவரை மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.” என அவர் தெரிவித்திருந்தார்.

  பல்வேறு ஸ்பான்சர்களின் பரிசுகளுடன் ரவேனாவுக்கு 450,000 தாய் பாட் ($12,700) பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

  தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....