Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமீண்டும் உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி- கலக்கத்தில் மக்கள்!

    மீண்டும் உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி- கலக்கத்தில் மக்கள்!

    ஜிஎஸ்டி அமைப்பின் 47 வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், சண்டீகரில் இரு அமர்வுகளாக நடைபெற்றது. இரண்டாவது நாளான நேற்று (ஜூன்-29), சில்லறை விற்பனை பொருட்களின் ஜிஎஸ்டி வரியை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது.

    ஜிஎஸ்டி வரி உயர்வு

    அஞ்சல் சேவைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கையும் ரத்து செய்துள்ளனர். இதனால், இனிமேல் அஞ்சல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படவுள்ளது.

    1000 ரூபாய்க்கும் குறைவான உணவக அறை வாடகைக்கு, 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளது.

    அரசு சார்ந்த மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்புதல் அடிப்படையில் செய்யப்படும் வேலைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளது.

    சோலார் சக்தி வாட்டர் ஹீட்டர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கான ஜிஎஸ்டி வரி 5-லிருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மோட்டார் பம்புகள் மற்றும் பால் பண்ணை இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12-லிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    எல்.இ.டி. விளக்குகள், பேனா மை, கத்தி மற்றும் பிளேடுகளுக்கு 12-லிருந்து 18 சதவிகிதமாக ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வணிகப் பெயர் இல்லாத பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% உயர்த்தப்பட்டுள்ளது.

    உணவு பொருட்களுக்கான கூடுதல் ஜிஎஸ்டி வரி அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.

    உணவுத்தட்டுப்பாட்டுக்கு தயாராகும் உலக நாடுகள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....