Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உணவுத்தட்டுப்பாட்டுக்கு தயாராகும் உலக நாடுகள்!

    உணவுத்தட்டுப்பாட்டுக்கு தயாராகும் உலக நாடுகள்!

    கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆகிய காரணங்களால் உலகெங்கிலும் உணவுத் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது நிலவிவரும் உணவுத் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ஜி7 அமைப்பானது 4.5 பில்லியன் டாலரை அளிப்பதாக அறிவித்துள்ளது.

    பல நாடுகளும் கோவிட் காலத்தில் பொருளாதார ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின. கொரோனா தொற்று காலத்தில் நேர்ந்த பொருளாதார இழப்புகளை சரிசெய்யவே பல நாடுகள் திணறி வருகின்றன. இவ்வாறான சூழலில்தான், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரினால் மேலும் பல இன்னல்கள் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் உருவாகியுள்ளது. 

    இதில் மிக முக்கியமான இன்னல் உணவுத்தட்டுப்பாடு. இந்த உணவுத்தட்டுப்பாட்டை குறைக்கவும், மேலும் உணவுத்தட்டுப்பாடு நேரா வண்ணம் இருக்கவும், ஜி7 அமைப்பானது 4.5 பில்லியன் டாலரை அளிக்க உள்ளது. இந்த நிதியில் பாதிக்கும் மேலாக அமெரிக்க அரசு தனது பங்காக அளிக்கவிருக்கிறது. 

    வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும்,  ஏழு நாடுகள் இருக்கும் ஒரு அமைப்பே ஜி7 ஆகும். இப்படியான ஜி7 அமைப்பு வழங்கும் 4.5 பில்லியன் டாலர் நிதியானது உலகளவில் உள்ள 47 நாடுகளில் உணவுச்சார்ந்த வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், அமெரிக்க அரசானது தன்னிச்சையாக 2.76 பில்லியன் டாலர்களை, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பினால் இன்னலுரும் மக்களின் உதவிக்காக வழங்கவுள்ளது. இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

    மனதை மயக்கும் பருப்பு பொடி; இப்படி செய்து பாருங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....