Sunday, March 17, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி, இன்று இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் நடைபெறவுள்ளது. 

    ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஏற்கனவே இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணியானது முன்னிலை வகிக்கிறது.

    ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரையில் நடைபெற உள்ள இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், இப்போட்டியை சமன் செய்தாலும் இந்த டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிவிடும். ஆனால், தோற்கும் பட்சத்தில்  இந்த டெஸ்ட் தொடர் சமனில் முடிந்துவிடும். 

    முதலில் இப்போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா, கொரோனா தொற்று காரணமாக விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. அதேபோல், பும்ரா மாற்று கேப்டனாக இன்று செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்திய அணி சார்பில் இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உத்தேச பட்டியல்:  புஜாரா, சுப்மான் கில், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா, முகமது ஷிராஜ்.

    சோர்ந்த மனதை தேற்ற யுவன் பாடிய பாடல்; வாழ்வு என்பது இவ்வளவுதான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....