Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலகில் மிகப் பரவலாக நம்பப்படும் மூட நம்பிக்கைகள்..!! அட, இதெல்லாம் நம்பிக்கையா?

    உலகில் மிகப் பரவலாக நம்பப்படும் மூட நம்பிக்கைகள்..!! அட, இதெல்லாம் நம்பிக்கையா?

    உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும், அவர்களுக்கே உரித்தான வகையில் ஒரு மூட நம்பிக்கைகளை வைத்திருப்பார்கள். அது ஒரு எண்ணாகவோ, ஒரு வண்ணமாகவோ, ஏதேனும் ஒரு சமிக்கையாகவோ கூட இருக்கலாம். அந்த ஒவ்வொரு மூட நம்பிக்கைகளுக்கு பின்னாலும் கட்டாயம் ஒரு கதையும் ஒளிந்திருக்கும்.

    இந்த மாதிரியான மூட நம்பிக்கை வயது வித்தியாசமின்றி  அனைவரிடமும் காணப்படுகிறது. இப்படி, ஒவ்வொரு நாடுகளிலும் அதிகம் பின்பற்றப்படும் மூட நம்பிக்கைகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்..

    இந்தியா: இரவில் நகத்தினை வெட்டுதல்..

    இந்தியாவில் பல மூட நம்பிக்கைகள் இருந்தாலும், மிகப் பிரபலமானதாக அறியப்படுவது இரவில் நகம் வெட்டுதல் கூடாது என்பதேயாகும். 

    இரவில் நகம் வெட்டுவது வீட்டிற்கு கேடு எனவும், தீய சக்திகள் வீட்டில் குடிபுகுவதை இந்த செயல் ஊக்குவிக்கிறது எனவும் நகம் வெட்டக்கூடாது என்பதற்கான காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.

    கூரான ஆயுதங்களை இரவில் உபயோகிப்பது தங்களையே காயப்படுத்திவிடும் என்பதற்காக இரவில் நகம் வெட்டுவதை நம்முடைய முன்னோர்கள் தவிர்த்து வந்தனர்.

    காலங்கள் மாற, அனைவரது வீடுகளிலும் மின்சாரம் வந்த பிறகு, இதன் பின்னால் உள்ள உண்மைகள் மறைந்து இரவில் நகம் வெட்டுவது என்பது ஒரு மூட நம்பிக்கையாக மாறியுள்ளது.

    சனிக்கிழமைகளில் முடி வெட்டுவதும் தவறு என்னும் மூட நம்பிக்கையும் இந்தியாவில் நிலவும் பிரபலமான மூடநம்பிக்கைகளில் ஒன்று.

    ரஷ்யா: காலி புட்டிகளை நிலத்தில் வைப்பது..

    காலி புட்டிகளை நிலத்தின் மீது வைப்பது ரஷ்யாவில் நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது.

    19ம் நூற்றாண்டுகளில் ரஷ்ய வீரர்களின் மூலம் இந்த மூட நம்பிக்கையானது உருவானது.

    ரஷ்ய வீரர்கள் பாரிஸில் இருந்த போது, காலி மது புட்டிகளை, மதுபானக் கடையில் விட்டுச் செல்வதற்கு காசு வசூலிக்கப்பட்டது. இந்த செலவினைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் காலி மதுபுட்டிகளை நிலத்தில் ஒளித்து வைத்தனர். இந்த பழக்கமானது பின்னாளில் மூட நம்பிக்கையாக மாறியது.

    ஐரோப்பா: மரத்தில் தட்டுவது..

    இடைக்காலத்தில் ஐரோப்பாவில்  உருவான இந்த மூட நம்பிக்கையானது மரத்தில் தட்டுவது நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இதே பழக்கமானது அமெரிக்க பகுதிகளில் கெட்ட சகுனமாகப் பார்க்கப்படுவது தான் விந்தையே!!

    துருக்கி: இரவில் சுவிங்கம் மெல்லுதல்..

    இரவில் சுவிங்கம் மெல்லுவது கெட்ட சகுனமாக துருக்கியில் பார்க்கப்படுகிறது. மேலும் இரவில் சுவிங்கமானது இறந்தவர்களின் சதையாக மாறும் என்ற கருத்தே இதற்குக் காரணமாகும். 

    இந்த மூட நம்பிக்கை எப்பொழுது எதனால் உருவானது என்பது தெரியவில்லையெனினும், துருக்கியில் இருக்கும் பெரும்பாலான மக்கள் இரவில் சுவிங்கம் மெல்லுவதை தவிர்த்து வருகின்றனர். அதற்குக் கூறியுள்ள காரணம் அப்படி..

    இங்கிலாந்து: மாதத்தின் முதல் நாளில் ‘ரேபிட்’ (rabbit) என்று கூறுதல்..

    இந்த மூட நம்பிக்கையானது இங்கிலாந்தில் 2,000 வருடமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. முதல் நாளில் ராபிட் என்று கூறுவது அந்த மாதம் முழுவதும் நல்ல விதமாய் அமையும் என்று அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர்.

    ஒரு வேலை காலையில் ராபிட் என்று கூற மறந்து விட்டால் என்ன செய்வது? கவலை வேண்டாம், அதற்கும் ஒரு மாற்று மாந்திரம் உள்ளது. மாதத்தின் முதல் நாள் இரவில் டிப்பார் (tibbar) (ராபிட்-டினை (rabbit) பின்னாலிருந்து கூறும் போது டிப்பார் (tibbar) என்று வரும்) என்று கூறுவதன் மூலமும் அந்த மாதத்தினை நல்ல விதமாய் அமைத்துக்கொள்ளலாம்.

    பிரேசில்: பணப்பையினை நிலத்தில் விட்டுச் செல்லுதல்..

    பிரேசிலைப் பொறுத்தமட்டில் பணப்பையினை நிலத்தில் விட்டுச் செல்வது கெட்ட சகுனமாகப் பார்க்கப்படுகிறது. இந்த மூட நம்பிக்கையானது பிரேசில் மட்டுமல்லாது தென் அமெரிக்க நாடுகள் மற்றும் பிலிபைன்ஸிலும் பின்பற்றப்படுகிறது.

    பணப்பையினை மிகவும் தாழ்வான இடத்தில் வைப்பது பொருளாதார ரீதியாக கேடு விளைவிக்கும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

    செர்பியா: ஒருவருக்குப் பின்னால் தண்ணீரினை நிரப்புதல்..

    செர்பிய நாட்டில் பின்பற்றப்படும் இந்த மூட நம்பிக்கையின்படி, ஒருவருக்குப் பின்னால் தண்ணீரினை நிரப்புவது நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது. பிரயாணத்திற்கோ, வேலை நேர்காணலுக்கோ செல்பவர்களுக்குப் பின்னால் தண்ணீரினை நிரப்புவதால் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது.

    தண்ணீரானது அதிர்ஷ்டமான பொருளாக செர்பியாவில் பார்க்கப்படுகிறது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாகப் பரவும் தன்மைக்காகவும், களங்கமற்ற நிறத்திற்காகவும் தண்ணீர் அதிர்ஷ்டமான பொருளாகப் பார்க்கப்படுகிறது.

    போர்ச்சுக்கல்: பின்னால் நடப்பது..

    முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது என்று நம்மூர்களில் கூறுவதுண்டு. அது போல போத்துக்கீசிய நாட்டில் பின்னால் நடப்பது தீய சகுனமாகப் பார்க்கப்படுகிறது.

    பின்னால் நடப்பது நம்மைத் தீய சக்திகளிடம் கொண்டு சேர்க்கும் என்று அந்த நாட்டில் நம்பப்படுகிறது. பின்னால் நடப்பதை வைத்து தீய சக்திகளானது நாம் எங்கு இருக்கிறோம், எங்கு செல்லவிருக்கிறோம் என்பது போன்ற தகவல்களை தீய சக்திகள் அறிந்து கொள்ளுமாம்!!

    ஸ்வீடன்: பாதாள சாக்கடை மூடிகளில் ‘கே’ அல்லது ‘ஏ’ என்ற எழுத்துக்களைப் பொரித்தல்..

    சாக்கடை மூடிகளில் மூட நம்பிக்கையா? பெரிய அக்கப்போராக அல்லவா உள்ளது என்று எண்ணத்தோன்றுகிறது அல்லவா? ஆனால் ஸ்வீடன் நாட்டில் பாதாள சாக்கடை மூடிகளில் உள்ள ‘கே’ மற்றும் ‘ஏ’ எழுத்துக்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    ‘கே’ என்ற எழுத்தில் கால் வைப்பது அதிர்ஷ்டத்தினைக் கொடுக்குமாம். ஏனென்றால் ‘கே’ என்னும் எழுத்து ஸ்வீடெனில் காதலைக் குறிக்க பயன்படுகிறது.

    அதுவே ‘ஏ’ என்னும் எழுத்தில் கால் வைப்பது துரதிஷ்டத்தினைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் உள்ளது. ‘ஏ’ எனும் எழுத்தானது மனமுடைதல் என்னும் வார்த்தையினைக் குறிக்க பயன்படுகிறது.

    ஆனால், உண்மையில் ‘கே’ என்னும் எழுத்து கல்வட்டேன் (kallvatten) அதாவது நல்ல தண்ணீர் என்பதனையும், ‘ஏ’ என்னும் எழுத்து அவ்ளோப்ஸ்வட்டேன் (Avloppsvatten) அதாவது சாக்கடை என்பதனையும் குறிக்கிறது. எது எப்படியாயினும் ஸ்வீடன் நாட்டு மக்கள் இந்த இரண்டு எழுத்துக்களை மிதிப்பதில் மிகக் கவனமாய் இருக்கிறார்கள்.

    சீனா: நம்பர் நான்கு..

    நான்கு என்னும் எண்ணினைத் தவிர்க்க சீனர்கள் எதையும் செய்யத் தயாராய் இருப்பார்களாம். 

    ஏனென்றால் ஃபோர் (Four) என்னும் உச்சரிப்பானது சீன மொழியில் மரணம் என்னும் வார்த்தையின் உச்சரிப்பிணை ஒத்ததை உள்ளது தான் காரணம்!!

    இதன் காரணமாகவே நான்கு என்னும் எண்ணானது சீனாவில் கேடு விளைவிக்கும் எண்ணாகப் பார்க்கப்படுகிறது.

    எகிப்து: வெட்டுவதற்கு தேவை இல்லாத போது கத்திரிக்கோலை உபயோகிப்பது..

    உபயோகமில்லாத நேரங்களில் கத்தரிக்கோலினை எடுப்பது எகிப்து நாட்டில் கெட்ட சகுனமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், கத்திரிக்கோலினை திறந்த நிலையிலேயே வைத்திருப்பதும் அங்கு கேட்ட சகுனமாகப் பார்க்கப்படுகிறது.

    தென் கொரியா: சுழலும் மின்விசிறி இருக்கும் அறையில் தூங்குவது..

    ‘காற்றாடி மரணம்’ என்னும் வார்த்தை தென் கொரியாவில் மிகவும் புகழ்பெற்ற வார்த்தையாம்.. மூடிய அறையில் மின்விசிறி சுழலும் போது தென்கொரியா மக்கள் தூங்குவதினைத் தவிர்த்து வருகின்றனர்.

    மின்விசிறியானது ‘ஹைபோதெர்மியா’ என்னும் விளைவினை ஏற்படுத்துகிறது என்று தென் கொரிய மக்கள் நம்புகின்றனர்.

    அமெரிக்கா: நாணயங்கள்..

    நாணயங்களை நிலத்தில் கண்டெடுப்பது நல்ல சகுனமாக அமெரிக்காவில் பார்க்கப்படுகிறது. அதிலும் தலை பக்கமானது தெரியும்படி கிடைக்கும் நாணயமானது மிகவும் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. ‘ஒரு காசினைக் கண்டு பிடி, அதை எடுத்துக்கொள், அந்த நாள் முழுவதும் உனக்கு நல்ல நாளாக அமையும்.’ என்பது அமெரிக்காவில் பிரபலமாக கூறப்படும் வார்த்தைகளில் ஒன்று.

    இப்படி ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என்று இடமும், மக்களும் மாறினாலும் அவர்களிடம் உள்ள மூட நம்பிக்கைகள் எந்த வித மாற்றமும் இன்றி அனைவரிடமும் காணப்படுகின்றன. மனிதர்களைப் பொறுத்த மட்டில், நம்பிக்கை என்பது மிகவும் உயர்ந்த பண்பாக மதிக்கப்படுகிறது. மனிதர்களுக்கு மட்டுமா? அனைத்து விலங்குகளுக்கும் நம்பிக்கை என்பது மிக முக்கியமான ஒன்று. 

    இதில், விஞ்ஞானத்தினால் விடை கூற முடியாத நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாகின்றன. எந்த ஒரு காரணமும் இன்றி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வித நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளாகவே கருதப்படுகின்றன.

    மூட நம்பிக்கைகள் அழிக்க முடியாதவை. அவை வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக புதிது புதிதாய் உருவாகிக்கொண்டு தான் இருக்கும். மனிதர்களின் கற்பனை எண்ணத்திற்கு தீனியாக இந்த மூட நம்பிக்கைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிமுக பொதுச் செயலாளர் ஆவாரா எடப்பாடி பழனிச்சாமி? ஓபிஎஸ் தெரிவித்த கண்டனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....