Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலக கோப்பை 2022: முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா!

    டி20 உலக கோப்பை 2022: முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா!

    கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு அணியின் கனவும் உலக கோப்பையை வெல்வது தான். பல நாடுகள், உலக கோப்பையை வென்றுள்ள நிலையில், இன்றளவும் உலக கோப்பையை வெல்லாத சிறந்த அணிகளும் உலகில் உண்டு. அதற்கான வாய்ப்பை இந்த ஆண்டும் ஐசிசி ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் வருகின்ற அக்டோபர் மாதம், ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது.

    உலக கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 16 ஆம் தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில், மொத்தமாக 16 அணிகள் கலந்து கொள்கின்றது. இதில் சூப்பர் 12 எனப்படும் லீக் சுற்றுக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 4 அணிகள் தகுதிப் போட்டியின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

    மீதமுள்ள இந்த 4 அணிகளின் காலியிடத்திற்காக எட்டு அணிகள் போட்டியிடும். இந்த எட்டு அணிகளும் இரு குழுவாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கு குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று பெயரிடப்பட்டுள்ளன.

    நேரடியாக உலக கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 12 அணிகள், குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 இல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. குரூப் 2 இல் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் இடம் பெற்றுள்ளது.

    மீதமுள்ள நான்கு அணிகளின் இடங்களைப் பிடிக்க இலங்கை, மேற்கு இந்திய தீவுகள், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் ஒன்றோடு ஒன்று மோதும். டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஏழு மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.

    உலக கோப்பைத் தொடரின் முதல் போட்டியில், இலங்கை மற்றும் நமீபியா அணிகள் அக்டோபர் 16 ஆம் தேதி மோதுகின்றன. சூப்பர் – 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதியிலிருந்து தொடங்கும். இதில் முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா. இந்த இரு அணிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணியின் ஆட்ட விவரங்கள்:
    • 23 அக்டோபர்  – இந்தியா Vs பாகிஸ்தான்
    • 27 அக்டோபர் – இந்தியா Vs குரூப் ஏ ரன்னர் அப்
    • 30 அக்டோபர்  – இந்தியா Vs தென் ஆப்ரிக்கா
    • 2 நவம்பர் – இந்தியா Vs வங்கதேசம்
    • 6 நவம்பர்  – இந்தியா Vs குரூப் பி வின்னர்.
    அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி:

    உலக கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி சிட்னியில், நவம்பர் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

    உலக கோப்பை 2022 – இன் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியானது, நவம்பர் 13 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

    வெளியே கடவுள் உள்ளே மிருகம்.. பெண்களின் வாழ்க்கையைக் குறிவைத்து தாக்கிய விக்ரம் வேதகிரி!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....