Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைன் நாட்டுக்கு உதவும் எலான் மஸ்க்: எழுச்சி பெறுமா உக்ரைன் இராணுவம்!

    உக்ரைன் நாட்டுக்கு உதவும் எலான் மஸ்க்: எழுச்சி பெறுமா உக்ரைன் இராணுவம்!

    இரஷ்யா – உக்ரைன் போரில், உக்ரைன் நாட்டிற்கு உதவுவதற்காக அந்நாட்டு இராணுவப் பயன்பாட்டிற்கு, மேலும் 15,000 இணையதளக் கருவிகளை அனுப்பியதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

    உக்ரைன் மற்றும் இரஷ்யா இடையிலான போர், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இன்று வரை முடிவென்பது எட்டப்படாத நிலையில், இந்தப் போரினால் இரு நாடுகளும் பல பொருள் மற்றும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. இது மட்டுமல்லாமல், உலக நாடுகளும் இந்தப் போரால், பல வகைகளில் இழப்பை சந்திக்கிறது. இதுவரையிலும், இப்போரில் இரஷ்யாவின் கையே ஓங்கியுள்ள நிலையில், உக்ரைன் விடா முயற்சியுடன் போராடி வருகிறது.

    உக்ரைன் மீதான இரஷ்யப் படையெடுப்பு கடந்த 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு உதவுகின்ற வகையில் ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகிறது. இதேபோல, உலக பணக்கார வரிசையில் ஒருவரான எலான் மஸ்க்கும், இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிற்கு, தனக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில் தற்போது, உக்ரைன் இராணுவம் பயன்படுத்தும் வகையில் எலான் மஸ்க், மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைன் நாட்டிற்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைன் நாட்டுக்கு சுமார் 15 ஆயிரம் இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆயிரம் இணையதள கருவிகள் அனுப்பப்பட்டது. இதனுடன், சூரிய வெப்ப ஆற்றலின் மூலம் மின்சாரத்தைப் பெறும் டெஸ்லா கருவிகளையும், உக்ரைன் நாட்டு இராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

    இந்நிலையில், டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்த உக்ரைனின் ஆயுத கிடங்கை, நவீனத்துவம் வாய்ந்த ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக இரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த ஆயுதக் கிடங்கில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் இருந்ததாகவும், இவை அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் இரஷ்யா தெரிவித்தது. இருப்பினும், உக்ரைன் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கவுதம் கம்பீர் ஆதரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....