Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கவுதம் கம்பீர் ஆதரவு

  பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கவுதம் கம்பீர் ஆதரவு

  இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு மற்றும் மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில் அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவை சேர்ந்தவருமான கௌதம் காம்பீர் ஆதரவு அளித்துள்ளார்.

  அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். சவூதி அரேபியா, அபுதாபி, யேமன் போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் இந்த விவகாரம் தொடர்பாக பெரும் பிரச்சினையை ஏற்படுத்தினார்.

  இதனை தொடர்ந்து, சர்ச்சை கருத்து காரணமாக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இதற்கிடையில், நுபுர் சர்மா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

  மேலும், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், மற்றும் தொலைக்காட்சி செய்தி விவாதங்களில் பங்கேற்க அதிகாரம் பெற்ற சில மத்திய அமைச்சர்கள் பொது மேடைகளில் மதத்தைப் பற்றி பேசும்போது “மிகவும் எச்சரிக்கையாக” இருக்குமாறு பாஜக அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நுபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகியுள்ள நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்துள்ளது.

  உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வன்முறை மோதல்கள் வெடித்துள்ள நிலையில் மத்திய அரசு நாட்டின் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதுகுறித்து மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தனக்கு மிரட்டல்கள் வருவதாக நுபுர் சர்மா புகார் கூறிய நிலையில், பல வலதுசாரி தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில் கிரிக்கெட் வீரராக இருந்து பாஜகவில் சேர்ந்து அரசியல்வாதியாக மாறிய கவுதம் கம்பீர் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நுபுர் சர்மாவுக்கு வழங்கியுள்ளார்.

  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் #LetsTolerateIntolerance என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்துள்ள காம்பீர், “மன்னிப்புக் கேட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்களின் மோசமான காட்சியைக் கண்டு ‘மதச்சார்பற்ற தாராளவாதிகள்’ என்று அழைக்கப்படுபவர்களின் மௌனம் நிச்சயமாக காது கேளாதது!” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

  உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் திரும்பிய இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....