Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்சுற்றுலா பயணிகள் விரும்பும் பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு

    சுற்றுலா பயணிகள் விரும்பும் பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு

    கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறுநகரத்தில் வெள்ளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது பத்மநாபபுரம் அரண்மனை.

    ரவிவர்மா குலசேகரப் பெருமாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த அரண்மனை, 17 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தலைமையகமாக விளங்கிய பத்மநாபபுரம் அரண்மனை, கேரளக் கட்டிடக் கலையின் நிகழ்கால சாட்சியாக இருக்கிறது.

    இது கேரளாவின் திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி நகரத்திற்குச் செல்லும் வழி யில் அமைந்துள்ளது . தமிழகப் பகுதியில் அமைந்திருந்தாலும் கேரள தொல்பொருள் துறை யினரால் பராமரிக்கப்பட்டு வரு கிறது. இந்த அரண்மனையைச் சுற்றி 4 கி. மீ. அளவிற்கு கிரா னைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது.

    அரண்மனை வரலாறு

    இந்த அரண்மனையானது கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள்-1592 -1609 என்பவரால் கட்டப்பட்ட து. முதலில் தாய்க்கொட் டாரம் மட்டும் 1550 களில் இருந்ததாகத் தெரிகிறது. பின் கி.பி.1706-1758 வரை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர் இந்த அரண்மனையை விரிவு படுத்தினார். அதன் பிறகு மன்னர் மார்த்தாண்ட வர்மா தங்கள் பரம்பரையினரை பத்மனாப புரத்தில் கோவில் கொண் டுள்ள விஷ்னுவின் சேவர்கள் என பிரகடனம் செய்தார்.1795 வரை பத்மநாபபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலை நகரமாக விளங்கியது.1795 இல் தான் தலைநகரம் திருவனந்த புரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த அரண்மனை கேரளக் கட்டட க்கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

    இவ்வரண்மனையில் உள்ள முக்கியமான கட்டிடங்கள் பின்வருமாறு:

    மந்திர சாலை
    தாய்க் கொட்டாரம்
    நாடக சாலை
    நான்கடுக்கு மாளிகை(உப்பரிகை மாளிகை)
    தெகீ கொட்டாரம் (தெற்கு கொட்டாரம்)

    மாளிகையின் எந்தத் திசையில் திரும்பினாலும் தேக்கில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் உள்ள ஜன்னல்களும் கதவுகளும் தூண்களும் வியப்பூட்டும்.

    பூமுகத்து வாசல்

    அரண்மனையின் முகப்பாகிய பூமுகத்துக்குச் செல்லும் முதன்மை வாசல் பிரம்மாண்டமானது, மரவேலைப்பாடுகளுடைய பெரிய இரட்டைக் கதவையும் கருங்கற் தூண்களையும் உடையது.

    மந்திர சாலை

    பூமுகத்தின் முதலாவது மாடியில் மந்திரசாலை காணப்படுகிறது. இங்குதான் மன்னர் மந்திரிகளுடன் கலந்துரையாடியதாகத்தெரிவிக்கப்படுகிறது.

    மணிமாளிகை

    மந்திரசாலையைக் கடந்து படிகளால் கீழே இறங்கினால் வருவது மணி மாளிகை ஆகும். இந்த மணிக்கூடு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த மணிக்கூட்டின் மணி யோசையை 3 கிமீ சுற்றுவட்டாரத்திற்குள்ளிருக்கும் அனைவராலும் கேட்க முடியும்.

    அன்னதானக் கூடம்

    மணிமாளிகையைத் தாண்டிச் செல்ல வருவது, ஒரு மாடியையுடைய அன்னதான மண்டபமாகும். இங்குள்ள மண்டபத்தில் ஒரே நேரத்தில் சுமார் ஏறத்தாழ 2000 பேர் ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும்.

    தாய்க் கூடாரம்

    தாய்க் கூடாரம் 1550 ல் கட்டப்பட்ட மிகவும் பழைய மாளிகை. அரசியின் அறை மற்ற அறைகளைக் காட்டிலும் கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கலைநயம் மிக்க கதவுகள், ஜன்னல்கள், அலமாரிகள், வீணை, கண்ணாடிகள், தொட்டில் போன்றவை கொண்டதாக உள்ளது அந்த அறை.

    உப்பரிகை

    உப்பரிகை, மன்னன் மார்த்தாண்ட வர்மனால் கி.பி. 1750 இல் அமைக்கப்பட்டது. ஸ்ரீபத்மநாபனுக்காக அமைக்கப்பட்ட மன்னரின் கூடாரம், நான்கு அடுக்கு மாடிகளை கொண்டதாகும். இங்கு 64 வகை மூலிகைகளால் செய்யப்பட்ட கட்டில் மன்னரின் அறையில் உள்ளது. டச்சு அரச வம்சத்தினரிடமிருந்து இந்தக் கட்டில் பரிசாகப் பெறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    இந்திர விலாசம்

    மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்திலே, விருந்தினர்களுக்கென அமைக்கப்பட்ட மாளிகையே இந்திர விலாசமாகும். மண்டபத்தின் வழியே சென்றால் இந்திர விலாசத்திற்குச் செல்ல முடியும். விருந்தினர் மாளிகையின் சன்னல்கள், அந்தப் புரப்பெண்கள் நீராடும் தடாகத்தை நோக்கியதாக அமைந்துந்துள்ளது.

    நவராத்திரி மண்டபம்

    இந்திரவிலாசத்தை அடுத்து வருவது நவராத்திரி மண்டபமாகும். . நவராத்திரிக் காலங்களில் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றுவதற்கென இந்த நவராத்திரி மண்டபம் பயன்பட்டது.

    பாதுகாப்பு!

    கீழ் தளத்தில் கருவூலம் அமைக்கப்பட்டுள்ளது. போர்காலத்தில் அரச குடும்பத்தினர் தப்பித்துச் செல்ல தனிச் சுரங்கம் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் கதவுகள் மூடப்பட்டுப் பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

    வெளியிலிருந்து அரண் மனை சன்னல்களூடாகப் பார்த்தால், உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில் நடப்பவற்றை நன்கு அவதானிக்கலாம். அத்தகைய விதமாக சன்னல்கள் யாவும், மரச்சலாகைகளால் அடைக்கப்பட்டிருக்கின்றன.அந்தப்புரப் பெண்கள், வெளியாரின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கும் இந்த கட்டமைப்பு சான்றாக அமைகிறது.

    அரண்மனையின் கட்டுமானம்

    இந்த அரண்மனையின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் யாவுமே உள்நாட்டில் கிடைக்கக்கூடிய மரப் பலகைகள், செங்கற்கள், கருங்கற்கள், சுன்னக்கற்கள் ஆகியனவாகும். எரிக்கப்பட்ட தேங்காய்ச் சிரட்டை, எலுமிச்சை, முட்டைவெண்கரு மற்றும் மரக்கறிகள் சிலவற்றிலிருந்து பெறப்பட்ட சாறு ஆகியவற்றைக் கொண்டுதான் பளிச்சிடும் கரிய நிறத்தரை உருவாக்கப் பட்டிருக்கிறது.

    மலசல கூடங்கள் முதலாம் மாடியிலேயே காணப்படுகின்றன. கழிவுகள், மூடப்பட்ட கற்கால்வாய்களின் வழியே கடத்தப்படும் வகையில், அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. இரவுகளில் ஒளி யூட்டுவதற்காகக் கலைநயம் மிக்க விளக்குகள் வகை வகையாகக் காணப்படுகின்றன.

    இயற்கை ஒளி

    ஏறத்தாழ 400 வருடங்கள் பழைமையான இந்த பத்மநாபபுரம் அரண்மனையில் இன்றும் கூட மின் விளக்குகளைக் காண முடியாது. சூரியனின் ஒளியே போதியளவான வெளிச்சத்தை வழங்குகிறது. அதனால் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணிவரையே அரண்மனை பொதுமக்களின் பார்வைக்காகக் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    அரிதான நோயினால் அவதிப்படும் ஜஸ்டின் பீபர்! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள் !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....