Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்ஒரு பக்கம் கோட்டை மறுபக்கம் பேட்டை.. சுற்றுலாவுக்குப் போக நாமக்கலில் ஒரு இடம்!

    ஒரு பக்கம் கோட்டை மறுபக்கம் பேட்டை.. சுற்றுலாவுக்குப் போக நாமக்கலில் ஒரு இடம்!

    ஒரு பக்கம் கோட்டையும் மறுபக்கம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேட்டைக்கும் நடுவில் மிக அழகாக உயர்ந்து நிற்கிறது நாமகிரி மலை. அது தான் நமது நாமக்கல். நாமக்கல் என்றதும் நினைவுக்கு வருவது முட்டையும் கோழிப்பண்ணைகளும் தான். ஆனால், இவற்றுக்கும் மேலாக பல வரலாற்றுச் சிறப்புமிக்க அனைவரும் காணக்கூடிய சுற்றுலா தளங்களும் அங்கு உள்ளன. 

    முன்பு சேலம் மாவட்டத்துடன் இணைந்திருந்த நாமக்கல் தலைநகர் சென்னையில் இருந்து 370 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. நாமக்கல்லில் காண்பதற்கு ஏராளமான இடங்கள் இருந்தாலும், பார்க்க வேண்டிய முதல் இடமாக சொல்லப்படுவது கொல்லிமலை ஆகாச கங்கை அருவி தான். 

    கொல்லிமலையும் ஆகாச கங்கை அருவியும் 

    பச்சை படர்ந்த மலை பார்வைக்கு ரசனையைக் கூட்டுகிறது. நாமக்கல்லில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த கொல்லிமலை. கடல் மட்டத்திலிருந்து 1190 மீட்டர் உயர்ந்து காணப்படும் இம்மலை சுமார் 400 சதுர மைல்கள் பரப்பை கொண்டுள்ளது. 

    இந்தக் கொல்லிமலையில் காண்பதற்கு வெறும் பசுமை மட்டுமல்ல. அறிய வகை மூலிகைகளும் அரப்பளீஸ்வரர் கோயில், அரசு மூலிகை பண்ணை, தாவரத் தோட்டம் என காண பல இடங்கள் உள்ளன. 

    இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று என்றால், அது அரப்பளீஸ்வரர் கோயில் அருகே விழும் ஆகாச கங்கை அருவி தான். இந்த அருவியின் தண்ணீர் பல மூலிகை தாவரங்களை கடந்து வருவதால் மகத்துவம் மிக்கதாக சொல்லப்படுகிறது. 

    அதுமட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் ஓரிக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பெரிய அளவில் திருவிழாவே நடத்தப்படுகிறது. கொல்லிமலையில் பல சித்தர்கள் வாழ்ந்த குகைகளும் காணப்படுகின்றன. கொல்லிமலையின் காற்று பட்டாலே நோய் விலகி சென்றுவிடும் என்கின்றனர் தமிழ் மருத்துவ வல்லுநர்கள். அந்த அளவிற்கு மருத்துவ குணம் நிறைந்த பகுதியாக அமைந்துள்ளது கொல்லிமலை. 

    ஆஞ்சநேயர் கோயில்:

    புகழ்பெற்ற தளமான ஆஞ்சநேயர் கோயில், கோட்டைக்கு முன்பாகவே அமைந்துள்ளது. இங்குள்ள அனுமன் சிலை ஒரே கல்லில் 200 அடி உயரத்தில் செதுக்கப்பட்டது. அதுமட்டும் இன்றி இங்கு இரண்டு குடவரை கோயில்களும் உள்ளன.

    அர்த்தநாரிஸ்வரர் கோயில்:

    தமிழ் நாட்டிலேயே சிவன் அர்த்தநாரிஸ்வரர் கோலத்தில் காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுவென சொல்லப்படுகிறது. இந்தக் கோயில் திருச்செங்கோடு மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 5 அடியில் இருக்கும் மூலவர் சிலையை சித்தர்கள் மூலிகைகளால் வடிவமைத்தனர் என கருதப்படுகிறது. இங்கு செங்கோட்டு வேலவர் என்ற பெயரில் முருகனுக்கும், விஷ்ணுவுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

    கைலாசநாதர் கோயில்:

    அர்த்தநாரிஸ்வரர் கோயில் குன்றின் மீது இருப்பதால் இந்தக் கோயில் ‘கீழ் கோயில்’ என அழைக்கபடுகிறது. பாண்டிய மன்னன் விக்ரம பாண்டியன் இக்கோயிலை கட்டியதாக சொல்லப்படுவதால் இந்தக் கோயிலை விக்கிரம பாண்டீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கின்றனர்.

    கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம்:

    கோயில்கள் பார்த்தவாறே சென்றதும் அடுத்து கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாய் இருப்பது தமிழுக்கு நாடியாய் திகழ்ந்த, கவிஞர்களில் புகழ்பெற்ற கவிஞராக திகழும் நாமக்கல் ராலிங்கம் பிள்ளையின் நினைவு இல்லம் தான்.

    1888-ல் பிறந்த இவர், 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை வீரர் ஆவார். இவர் காந்தியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவருக்கு கடந்த 2 ஆயிரம் ஆம் ஆண்டு நினைவு இல்லம் கட்டப்பட்டது.

    நாமக்கல் துர்க்கம் கோட்டை:

    நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் இன்றும் வரலாற்று சின்னமாய் அமைந்திருப்பது தான் துர்க்கம் கோட்டை. 1792 ஆம் ஆண்டு ஹைதர் அலி இந்தக் கோட்டையை மீட்டெடுக்க மீண்டும் ஆங்கிலேயரிடம் சென்றது. வரலாற்றில் வீழ்ச்சியும் எழுச்சியும் அடுத்தடுத்து வருவது தானே…

    கட்டாயம் நாமக்கல் சென்றால் இந்த இடங்களை மறக்க வேண்டாம்… 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....