Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்சுற்றுலாத்தளங்கள்300 ஆண்டுகளுக்கும் மேலான திருமயம் மலைக்கோட்டையில் இதெல்லாம் இருக்கிறதா?

    300 ஆண்டுகளுக்கும் மேலான திருமயம் மலைக்கோட்டையில் இதெல்லாம் இருக்கிறதா?

    தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது புதுக்கோட்டை. இங்கு மன்னராட்சி இருந்தது என்பதற்கு அழியாத சுவடுகள் பல உள்ளன. கொடும்பாளூர், நார்த்தாமலை, குடுமியான் மலை, குன்னாண்டார் கோயில், சித்தன்ன வாசல், திருமயம் மலைக்கோட்டை, ஆவுடையார் கோயில் போன்றவற்றை புதுக்கோட்டைக்கு சென்றால் நிச்சயம் சென்று பார்த்திட வேண்டிய இடங்களாக திகழ்ந்து வருவது புதுக்கோட்டை. அவற்றில் நாம் இன்று காணப்போவது திருமயம் மலைக்கோட்டை. 

    திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் ஆண்டு ராமநாதபுரம் சேதுபதி எனும் மன்னரான ரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.  இவரது காலத்தில் இந்தப் பகுதி செஉத்பத்தி நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்தது என கூறப்படுகிறது. 

    திருமயம் என்ற இந்த சிறு நகரத்தை சோழர்கள், பாண்டியர்கள் என பல குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டுள்ளது. இதைஅயது இராமநாதபுரம் சேத்துப்பதிகள் 16-17 ஆம் நூண்றாடுகளில் திருமயத்தை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இவர்களுக்கு அடுத்து பல்லவர்களும், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் திருமயத்தை ஆட்சி செய்துள்ளனர். 

    திருமயம் கோட்டை அமைப்பு:

    திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைத்துள்ள கோட்டை ஆகும். இந்தக் கோட்டையைச் சுற்றி அகழிகள் இருந்ததற்கான சுவடுகளை இப்போது சென்றாலும் காண முடியும். அதே சமயம் பல இடங்களில் இந்த அகழிகள் பயன்படுத்தாமல் இருப்பதால் தூர்ந்து காணப்படுகின்றன. இந்தக் கோட்டையின் வெளிப்புற மதில்கள் காலம் மாறுதல் காரணமாக சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. 

    thirumayam fort

    திருமயம் கோட்டையை சுற்றி 7 சுற்று மதில்கள் இருந்ததாக தொல்லியல் துறை வரலாற்று அறிவிப்பு பலகைகள் உள்ளது. கோட்டைக்கு 3 நுழைவு வாயில்கள் உள்ளன. திருமயம் மலைக்கோட்டையின் உள்கோட்டையைச் சுற்றி உயராமண மதில்சுவர்கள் மிக அழகாக கட்டப்பட்டுள்ளன.

    கோட்டையின் உச்சியில் பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது. மேலும் கோட்டையின் தெற்கு நுழைவு வாயில் அருகே 2 பீரங்கிகள் நிறுவப்பட்டுள்ளன. இதைத் தவிர்த்து தனியாக பாதுகாப்பட்ட கட்டிடங்கள் என எதுவுமில்லை. 

    thirumayam fort

     

    அதே சமயம், இந்தக் கோட்டையில் இருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பூட்டுகள், பீரங்கிகள், சங்கிலிப் போர் உடைகள் என அரியவகை பொருள்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. 347 ஆண்டுகள் பழமையான இந்தக் கோட்டையை வரலாற்று சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது.   

    டியூப் லைட்டை உடைத்து தப்பிக்க முயன்ற கைதி; பரபரப்பில் நீதிமன்ற வளாகம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....