Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் திரும்பிய இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு

    உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் திரும்பிய இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு

    உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய இந்திய மருத்துவக் கல்வி மாணவர்கள் தங்களது கல்வியை தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில் தொடர ரஷ்யா அனுமதி வழங்கியுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, அங்கு படித்துக் கொண்டிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பினர்.தற்போது வரை உக்ரைனில் போர் நீடிப்பதால், மாணவர்கள் திரும்பி செல்ல முடியவில்லை.

    அதனால், படிப்பை தொடர முடியுமா என்று கேள்வி எழுந்த நிலையில், டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் உயர் அதிகாரி ரோமன் பாபுஸ்கின், உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், தங்களது முந்தைய கல்வி ஆண்டுகளை இழக்காமல், அதே படிப்பை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டெல்லியில் ரஷ்யத் தூதரகத்தின் துணைத் தலைவர் ரோமன் பபுஷ்கின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்றுவரும் போரால், மருத்துவக் கல்வியை பாதியில் கைவிட்டு இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். அந்த மாணவர்களை எங்கள் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. எங்கள் நாட்டு பல்கலைக்கழகங்கள் அந்த மாணவர்களின் கடந்த ஆண்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும். தங்கள் கல்வியை இந்திய மாணவர்கள் தொடரலாம் என்று அந்த அறிக்கையில் ரோமன் பபுஷ்கின் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இன்னமும் போர் முடிவுக்கு வரவில்லை. 100 நாட்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில், செய்தியாளர்கள் உக்ரைனிலிருந்து வெளியேறிய 20,000 மாணவர்கள் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து ரஷ்ய தூதரகம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மூளையின் திறனை அதிகரிக்க வழிகாட்டும் விஞ்ஞானிகள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....