Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்றோடு முடிவுக்கு வருகிறது இடைக்கால மீன்பிடித் தடை: உற்சாகத்தில் மீனவர்கள்!

    இன்றோடு முடிவுக்கு வருகிறது இடைக்கால மீன்பிடித் தடை: உற்சாகத்தில் மீனவர்கள்!

    மீன்வளத்தை பாதுகாக்க தமிழகத்தில் 61 நாட்களாக இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம், இன்றோடு முடிவுக்கு வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஆழ்கடலுக்குள் சென்றால் கண்டிப்பாக நிறைய மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் காத்திருக்கின்றனர். இதனால் மீன்களின் விலை வரவிருக்கும் நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மத்திய அரசு மீன்வளத்தைப் பாதுகாக்கவும், மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் ஒவ்வொரு வருடமும், மீன்பிடி தடைக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில், கிழக்கு கடற்கரை பகுதிகளில், வருடந்தோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

    இந்த வகையில் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்த மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இதனால், ஆழ்கடல் மீன் பிடி விசைப்படகுகள் கரையோரங்களில் நிறுத்தப்பட்டடிருந்தது.

    இந்த காலத்தில், மீன்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருந்தது. மேலும், 14 மாவட்டங்களில் உள்ள 15 ஆயிரம் படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாமல் இருந்தது. இன்றுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது. இதனால் இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர். அதற்கான ஆயத்தப் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுவாக, மீனவர்கள் இந்த தடைக்காலத்தை உபயோகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்வது, வர்ணம் பூசுவது மற்றும் வலைகளை பராமரிப்பது போன்ற பணிகளை செய்து முடிப்பார்கள். அதன்படி தற்போது இந்தப் பணிகள் நிறைவுப்பெற்று படகுகளும், வலைகளும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. நேற்றுடன் இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆழ்கடலுக்குள் மீனவர்கள் சென்றால் நிறைய மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் காத்திருக்கின்றனர். இதனால் மீன்களின் விலை குறையும். 60 நாட்களுக்கும் மேலாக ஐஸ் மீன்களை சாப்பிட்டவர்கள், இனிமேல் நல்ல ப்ரஸ் ஆன மீன்களை சாப்பிடலாம்.

    ஒவ்வொரு வருடமும், மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும் நாட்களில் விசைப்படகுகளில் ஆய்வுகள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டும் மீன்பிடி விசைப் படகுகளை ஆய்வு செய்த நிலையில், கடல் வளத்தை கெடுக்கும் விதமாக அதிக திறன் உடைய குதிரை இன்ஜின்களை பயன்படுத்தினால், விசைப்படகுகளின் உரிமம் இரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இராணி இரண்டாம் எலிசபெத் செய்த சாதனை; கொண்டாடும் அரண்மனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....