Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இராணி இரண்டாம் எலிசபெத் செய்த சாதனை; கொண்டாடும் அரண்மனை!

    இராணி இரண்டாம் எலிசபெத் செய்த சாதனை; கொண்டாடும் அரண்மனை!

    ஐக்கிய ராஜ்யத்தின் ராணி இரண்டாம் எலிசபெத் 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 நாள் பிறந்தார். இவரின் இயற்பெயர் எலிசபெத் அலெக்ஸாண்ரா மேரி என்பதாகும். இவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் இறந்தவுடன் ஐக்கிய ராஜ்யத்தின் ராணியாக முடி சூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயதாகும். இப்போது இவருக்கு 96 வயதாகிறது. 

    இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் ராணியாக பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக 2022-ஆம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக ராயல் அரண்மனை கொண்டாடிவருகிறது. 

    பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத் அரசு பணியை ஏற்று, 70 ஆண்டுகளை ராணியாக நிறைவு செய்துள்ளார். இதன்காரணமாக பிரிட்டன் சாம்ராஜ்யத்தில், 70 ஆண்டு காலம் ஆட்சி செய்த முதல் மகாராணி என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் பிரிட்டன் வரலாற்றில் 63 ஆண்டுகாலம் ஆட்சி செய்த விக்டோரியா மகாராணியின் சாதனையை முறியடித்துள்ளார். 

    அதுமட்டுமின்றி, தாய்லாந்து நாட்டு முன்னாள் அரசரான பூமிபோல் அதுல்யதேஜ் என்பவரின் சாதனையான, 1927 முதல் 2016 வரை 70 ஆண்டுகள் 126 நாட்கள் வாழ்ந்த உலகிலேயே இரண்டாவது அரசர் என்ற சாதனையை ராணி இரண்டாம் எலிசபெத் முறியடித்துள்ளார். இதன்மூலம் உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது மகாராணியாக இரண்டாம் எலிசபெத் சாதனை நிகழ்த்தியுள்ளார். 

    இவர் பிரிட்டனின் ராணி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசனப்படி, இவர்தான் அரசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர், பிரிட்டிஷ் அரசால் ஆளப்பட்ட 56 நாடுகளின் கூட்டமைப்பிலும் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். இவைகளைத் தவிர, பிரிட்டன் திருச்சபையின் ஆளுநராகவும் இருந்து வருகிறார். இரண்டாம் எலிசபெத் ராணி பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றுகிறார். 

    உலக வரலாற்றில் நீண்ட கால அரசராக முதலிடம் வகித்து வருபவர், பிரான்ஸ் தேசத்து அரசர் பதினான்காம் லூயிஸ் (1643-1715) 72 ஆண்டுகள் 110 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தியா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....