Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தியா!

    உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தியா!

    உலகிலேயே கோதுமை ஏற்றுமதியில் இரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் தான் முன்னணியில் இருந்தன. ஆனால், இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரால் கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கோதுமை விலை அதிகரித்துள்ளது. இதனால், உலகிலேயே 3 வது மிகப்பெரிய கோதுமை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளரான இந்தியாவின் பக்கம் உலக நாடுகள், தங்கள் கவனத்தை திருப்பியது.

    இரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின், இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியது. அதே நேரத்தில், நாட்டில் நிலவும் வெப்பநிலை காரணமாக இந்த ஆண்டு கோதுமை விளைச்சல் பாதிக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. மேலும், கோதுமை விலையும், கோதுமையால் செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலையும் உயரத் தொடங்கியது. கோதுமைக்கான தேவையும் படிப்படியாக அதிகரித்தது. இதை உணர்ந்த மத்திய அரசு, உள்நாட்டுத் தேவையை சரிசெய்யவும், விலையைக் கட்டுப்படுத்தவும் அதிரடியான நடவடிக்கையை எடுத்தது. அதன்படி, கோதுமை ஏற்றுமதிக்கு திடீரென தடை விதித்து உத்தரவிட்டது.

    கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை, இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள், ஐ.நா., மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யும் வேண்டும் என இந்தியாவை கேட்டுக் கொண்டன. டோவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளதார மாநாட்டிலும் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். அங்கும், இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இல்லையெனில், உலக நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.

    இதனை ஏற்று, கோதுமையை ஏற்றுமதி செய்ய, தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா தளர்த்தியுள்ள நிலையில், சர்வதேச நிதியம் வரவேற்றுள்ளது.

    சர்வதேச நிதியத்தின் செய்தி தொடர்பாளர் கெர்ரி ரைஸ் இது குறித்து கூறுகையில், கோதுமை ஏற்றுமதிக்கான தடையை, இந்தியா தளர்த்தியதை சர்வதேச நிதியம் வரவேற்கிறது. அதே நேரத்தில், வேறுசில 30 நாடுகள் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை மிகவும் கவலை அளிப்பதாக சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா மற்றும் முதன்மை துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்தியா உள்பட அனைத்து நாடுகளும், உணவுப் பொருட்கள் மீதான ஏற்றுமதி தடையை மேலும் தளர்த்தும் என, எதிர்பார்க்கிறோம் என்று கெர்ரி ரைஸ் கூறினார்.

    கஞ்சா பயன்படுத்த தாய்லாந்தில் இனி தடையில்லை: அதிரடி சட்டம் நிறைவேற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....