Monday, March 18, 2024
மேலும்
  Homeவாழ்வியல்ஆரோக்கியம்மூளையின் திறனை அதிகரிக்க வழிகாட்டும் விஞ்ஞானிகள்

  மூளையின் திறனை அதிகரிக்க வழிகாட்டும் விஞ்ஞானிகள்

  நீங்கள் என்பது உங்கள் மூளை என்றே சொல்லலாம். நீங்கள் யார் என்பதும், உங்கள் செயல்பாடும் மூளையைச் சார்ந்ததே. உடலின் உறுப்புகளை இயக்குவது, அவற்றைக் கட்டுப்படுத்துவது, சிந்தனை, திட்டமிடல், திட்டமிட்டதை செயல்படுத்துவது, உணர்வுகள், உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது, நினைவுத்திறன், உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை சுரக்கச்செய்வது போன்ற எண்ணற்ற பணிகளை மூளைதான் செய்கிறது.

  இன்றைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஒருவருக்கு உடலில் எல்லா உறுப்புகளையும் மாற்றிவிட முடியும். ஆனால், மூளை மட்டும் மாற்ற முடியாத உறுப்பாகவே இருக்கிறது. அதற்கு பதிலும் முதல் சொன்னதுதான்.

  இளம் வயதிலேயே மூளையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவோரின் மூளை அவர்களுக்கு வயதானபின் நன்றாக செயல்படும். மூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிட குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

  அதற்குப் பதிலாக,மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும், இசைக் கருவிகளைக் கற்றல், பூத்தையல் வடிவமைத்தல் அல்லது தோட்டக்கலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று குளோபல் கவுன்சில் ஆஃப் பிரெய்ன் ஹெல்த் என்னும் அமைப்பின் அறிக்கை பரிந்துரைக்கிறது.

  எவ்வளவு இளம் வயதில் இந்த செயல்களில் ஒரு நபர் ஈடுபடத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு முதுமையில் அவர்களின் மூளை நன்றாக செயல்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள, தாமதம் என்று எதுவுமில்லை என்று ஏஜ் யூ.கே அமைப்பு கூறியுள்ளது.

  சர்வேதேச அறிவியலாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசாங்கங்களின் கொள்கை முடிவு வல்லுநர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அந்த அமைப்பு, மூளைத் திறனைத் தூண்டுவதற்கும், அறிவாற்றல் குறைவதைத் தடுக்கவும் ஆகச் சிறந்த வழிமுறைகளைப் பற்றி அந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

  மூளைத் திறனை அதிகரிக்க, புதிர்கள் மற்றும் மூளை விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை இணையத்தளத்தில் விளையாடுவது மிகவும் முக்கியமானது என்று பலரும் நம்பினாலும், அவற்றால் உண்டாகும் பலன்கள் மிகவும் வலுவற்றவையாக உள்ளன அல்லது பலன்களே இல்லாமலும் உள்ளன.

  “அந்த மூளை விளையாட்டுகளை மனிதர்கள் விளையாடினால், அந்த விளையாட்டில் அவர்கள் முன்னேறலாம். ஆனால் அந்த விளையாட்டில் உண்டாகும் முன்னேற்றத்தால் அவர்களின் தினசரி அறிவுசார் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான தீர்க்கமான முடிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை, ” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

  உதாரணமாக, சுடோக்கு விளையாடுவதால் உங்களின் நிதி மேலாண்மைத் திறன் அதிகரித்துள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அந்த அறிக்கை நாம் சிந்தனை செய்யும் முறைகளை கேள்விக்கு உள்ளாக்கும் புதிய செயல்களைச் செய்யப் பரிந்துரைப்பதுடன் சமூகத்தோடு இணைந்து செயல்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றச் சொல்கிறது.

  உதாரணங்களில் சில

  டாய்-செய் பயிற்சி செய்வது
  உங்கள் முந்தைய தலைமுறைகள் பற்றி ஆய்வு செய்வது
  புகைப்பட பயிற்சி
  சமையல் செய்வது
  தோட்டக் கலை
  புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது
  படைப்புத்திறனுடன் எழுதுவது
  கலைத் திட்டங்களில் ஈடுபவது
  தன்னார்வலர் ஆவது
  குளோபல் கவுன்சில் ஆஃப் பிரெய்ன் ஹெல்த் அமைப்பை நிறுவ உதவிய ஏஜ் யூ.கே-வின், தலைமை விஞ்ஞானி, ஜேம்ஸ் குட்வின், மூளைத்திறன் குறைவது தடுக்கக்கூடிய ஒன்றே என்று கூறுகிறார்.

  “உங்களுக்குத் புதிதாகவும், உங்களின் கவனக் குவிப்பையும் கோரும், மூளையின் நலனுக்குப் பலனளிக்கக்கூடிய, ஏராளமான செயல்களை இன்றே நாம் தொடங்கலாம்,” என்று கூறும் அவர் “நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்றட வாழ்வில் செய்யக்கூடிய, பேரக் குழந்தைகளுடன் விளையாடுவது, தோட்டத்தைப் பராமரிப்பது, சீட்டு விளையாடுவது உள்ளிட்டவையாகவும் அந்தச் செயல்கள் இருக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.

  “புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வ கால தாமதம் என்று எதுவும் இல்லை என்றாலும், இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி, உங்களின் மூளையின் நலனைப் பாதுகாப்பதற்கு உங்கள் கடைசி காலம் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பதே,” என்கிறார் ஜேம்ஸ் குட்வின்.

  மேலும், உங்கள் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சமச்சீரான உணவை எடுத்துக் கொண்டாலே மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் உங்கள் மூளையும் ஆரோக்கியமாக இருக்கும்.

  இதேபோல், மூளையின் வளர்ச்சிக்குத் தூக்கம் மிகவும் முக்கியமானது. தூக்கம்தான் மூளையின் உயிரணுக்களின் வளர்ச்சிக்கும் மூளையின் நினைவுத்திறன் மேம்படுவதற்கும், புலனுணர்வு செயல்பாடுகளை அதிகரிக்கவும், மூளை தானாகவே புத்துணர்வு அடைவதற்கும் உதவுகிறது. சராசரியாக ஒருவர் நாள் ஒன்றுக்கு 7 மணிநேரம் தூங்குவது நல்லது. ஏனெனில், தூக்கம் மூளையின் வளர்ச்சிக்கும், மூளையின் செயல்பாட்டுக்கும் மிகவும் முக்கியமானது.

  மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்! பரபரப்பில் மக்கள்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....