Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சீனாவில் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்..அமெரிக்காவிற்கு ஏற்றுமதியா? - எலான் மஸ்க் சொன்ன பதில்

    சீனாவில் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்..அமெரிக்காவிற்கு ஏற்றுமதியா? – எலான் மஸ்க் சொன்ன பதில்

    சீனாவில் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்கள் அமெரிக்காவிற்கு விற்பனைக்கு வரவுள்ளதாக வெளிவந்த தகவல் குறித்து எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். 

    உலகப் பணக்காரர்களில் முக்கியமானவரும், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர், எலான் மஸ்க். இவர் தனது மற்றொரு நிறுவனமான ‘டெஸ்லா’-வின் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி வருகிறார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்த டெஸ்லா நிறுவனம் செயல்படுகிறது. 

    டெஸ்லாவின் தொழிற்சாலைகள் உலகளவில் நிறுவப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மாடல் 3 செடான்கள் மற்றும் மாடல் ஒய் கிராஸ்ஓவர் கார்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வட அமெரிக்காவிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் குறித்து எலான் மஸ்க்கிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, இது பொய்யானது என்று தெரிவித்துள்ளார். 

    சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள டெஸ்லா தொழிற்சாலை ஆண்டுக்கு 1.1 மில்லியன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேலும், இப்பகுதியில் உருவாகும் வாகனங்கள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்கவாரிசு திரைப்படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல்; தயாரிப்பாளர் சங்கம் வைத்துள்ள செக்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....