Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாரிசு திரைப்படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல்; தயாரிப்பாளர் சங்கம் வைத்துள்ள செக்!

    வாரிசு திரைப்படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல்; தயாரிப்பாளர் சங்கம் வைத்துள்ள செக்!

    வாரிசு திரைப்படம் தொடர்பாக ‘தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்’ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான்,வாரிசு. இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். 

    ரசிகர்களின் ஆர்வத்தை சமீபத்தில் விஜய் குரலில் வெளிவந்த ரஞ்சிதமே பாடல் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், திரைப்படம் சார்ந்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் குறித்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கேள்வியை பதிவு செய்து வருகின்றனர். இசைவெளியீட்டு விழா குறித்த தகவல்களால் ரசிகர்கள் தற்போது குஷியாக உள்ளனர். 

    ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஒரு தகவல், விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும், வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளது. ஆம், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தற்போது முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    அந்த அறிவிப்பின்படி, பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்றும் டப்பிங் படங்களுக்கு மிச்சமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும் தெரிவித்துள்ளது.

    வாரிசு திரைப்பட தயாரிப்பாளர், கடந்த 2019-ஆம் ஆண்டு தயாரிப்பாளர்கள் கவுன்சில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தில் ராஜூ பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின்போது அதிகளவில் டப்பிங் செய்யப்பட்ட படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது. நேரடி தெலுங்கு படத்திற்கு டப்பிங் படங்களை விட கம்மியான அளவில் தான் திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது. தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த வேண்டுமானால் இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

    இப்படியாக தில் ராஜூ பேசியதை சுட்டிக்காட்டிதான் தற்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    மேலும், வாரிசு படம் வெளியாகும் அதே தினத்தில் ‘வீர சிம்ம ரெட்டி’ மற்றும் ‘வால்டர் வீரய்யா’ போன்ற நேரடி தெலுங்கு படங்கள் வெளியாகப்போவதால், வாரிசு படத்தின் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படும். அதேபோல தமிழகத்தில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் ஒன்றாக வெளிவரவுள்ளது. இதனால், தமிழகத்திலும் வசூல் பாதிக்கப்படும். 

    வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ் திரைப்படமாக உருவானாலும், தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால், தெலுங்கு திரையுலகில் ரிலீஸ் அடிவாங்கினால் வசூல் பாதிப்படையும். இதனால், தற்போது படக்குழு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ‘இப்படியும் ஒரு காமெடி படமா’ – நிவின் பாலியின் அசத்தல் படம் ஒரு பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....