Tuesday, May 16, 2023
மேலும்
  Homeதொழில்நுட்பம்என்னப்பா....இனி ட்விட்டர் பயனர்களிடம் இருந்து காசு வாங்கிடலாமா? - எலான் மஸ்க் செய்த சம்பவம்!

  என்னப்பா….இனி ட்விட்டர் பயனர்களிடம் இருந்து காசு வாங்கிடலாமா? – எலான் மஸ்க் செய்த சம்பவம்!

  பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் அவர்கள் வாங்கியிருப்பது அனைவரும் அறிந்ததே!

  ட்விட்டர்:

  ட்விட்டர் நிறுவனத்தின் போர்டு மெம்பராக இருந்து வந்த அவரால் , 14.9 சதவீத பங்குகளை மட்டுமே வாங்க முடிந்தது. இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார்.

  இந்திய மதிப்பில் இது சுமார் 33 லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தமாகும். அதன்படி ஒவ்வொரு ட்விட்டர் பங்குக்கும், தலா 4 ஆயிரத்து 154 ரூபாய் என மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். ட்விட்டரை வாங்குவதற்காக, டெல்ஸா நிறுவனத்தின் பங்குகளை சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எலான் மஸ்க் விற்றும், கூடுதலாக அடமானம் வைத்து சுமார் 93 ஆயிரம் கோடி ரூபாயும், கடனாக 95 ஆயிரம் கோடி ரூபாயும் எலான் மஸ்க் வாங்கியிருக்கிறார். ட்விட்டர் கைமாறிய பிறகு , சிஇஓ பாரக் அகர்வால் பதவி நீக்கம் செய்யப்பட்ட போன்றவற்றால், அதன் எதிர்காலம் என்னவாகும் மற்றும் அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் நிலை என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுந்து உள்ளது.

  மாற்றங்கள்:

  ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியப் பிறகு அதில் பல்வேறு மாற்றங்கள் வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், டெக் நிறுவனங்களை ஆச்சரிப்படுத்திய இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, எலான் மஸ்கும் தனது ட்விட்டுகள் வாயிலாக அதிரடியாக பல முடிவுகளை அறிவித்து வருகிறார்.

  எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின்பு வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “சுதந்திரமான பேச்சு என்பது செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். ட்விட்டர் எதிர்காலத்திற்கு தேவையான முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும் டிஜிட்டல் தளமாகும்” என்று கூறியிருந்தார்.

  மேலும், “புதிய அம்சங்களுடன் தயாரிப்பை மேம்படுத்துவதன் மூலமும், பயனர்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். ஸ்பேம் போட்களைத் தோற்கடிப்பதன் மூலமும், அனைத்து மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும், ட்விட்டரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்ததாக மாற்ற முடியும். இதையே நான் விரும்புகிறேன்.” என்று ட்வீட் செய்திருந்தார்.

  அதுமட்டும் இல்லாமல், ட்விட்டர் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த மஸ்க், விரைவில் Direct Messages-களுக்கு End to End Encryption அம்சம் வழங்கப்படும் எனவும் உறுதிபட தெரிவித்திருந்தார். எலான் மஸ்க் ட்விட்டரை கைபற்றியதில் இருந்து, அவரது பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகளவு பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

  இந்நிலையில், புதிய அறிவிப்பு ஒன்றை எலான் மஸ்க் வெளியிட்டு உள்ளார். அதன்படி, அரசு ஊழியர்கள், வணிக நிறுவனங்கள் ட்வீட் செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

  இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

  “ட்விட்டர் எப்பொழுதும் சாதாரண பயனர்களுக்கு இலவசமாக இருக்கும், ஆனால் வணிக மற்றும் அரசு பயனர்களுக்கு சிறிய கட்டணம் விதிக்கப்படலாம் ” என்று தெரிவித்துள்ளார்.

  அவரது இந்த பதிவு பயனர்களில் ஒரு தரப்பினருக்கு அதிர்ச்சியையும், மற்றொரு தரப்பினருக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

  மேலும், ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாகியை நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ட்விட்டரின் சட்டத் தலைவர் விஜயா காடேவை நீக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

  ஐந்தாண்டுகளுக்கு முன்பு எலான் மஸ்க், ஐ லவ் டுவிட்டர் என பதிவிட்டிருந்தார். எலான் மஸ்க் இந்த பதிவுக்கு டேவ் ஸ்மித் என்பவர் ரிப்ளை செய்திருந்தார். அதில் பிடித்திருந்தால் வாங்க வேண்டியது தானே என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மஸ்க், விலை என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஐந்தாண்டுக்கு முன்பு எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட் தற்போது வைரல் ஆகி வருகிறது.

  இதையும் படிங்க; மீண்டும் சர்ச்சையில் ஜெய் பீம்! சூர்யா மற்றும் ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....