Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஏற்கனவே மானியம் இல்லை; பெரிய இலாபம் இல்லை; இப்போது உரமும் இல்லை! - விவசாயிகளின் கவலை...

    ஏற்கனவே மானியம் இல்லை; பெரிய இலாபம் இல்லை; இப்போது உரமும் இல்லை! – விவசாயிகளின் கவலை நிலை!

    மனித இனத்திற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு, இப்போது கடினமான சூழல் நிலவுகிறது. உரங்களின் விலை உயர்வே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால், விவசாயிகள் உரப் பயன்பாட்டை குறைத்து வருகின்றனர்.

    இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கடந்த வருடத்தில், உணவு உற்பத்திக்குத் தேவையான, உரங்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.

    உரங்களின் அளவு குறைந்தால், விளைச்சலும் குறைந்தே விடும். அடுத்த பருவத்தில் விளைச்சலானது 10% குறைந்து விடும், இதனால் 36 மில்லியன் டன் அரிசி இழப்பு ஏற்படும். அதாவது, 500 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க முடியாமல் போகலாம் என்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது “மிகவும் பழமைவாத மதிப்பீடு” என்று அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த விவசாயப் பொருளாதார நிபுணர் ஹம்நாத் பண்டாரி, உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்றால், அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறினார்.

    குறிப்பாக, நெல் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். நெல் விவசாயிகள் தங்களின் விளைச்சலுக்கு, குறைந்த பணத்தைப் பெறும் அதே வேளையில் விலை உயர்வைக் கையாள்கின்றனர். உர விலை உயர்வால், பல விவசாயிகள் உரப் பயன்பாட்டை 10% – 20% வரை குறைத்துள்ளனர். இதனால் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. விவசாயிகள் உரப் பயன்பாட்டைக் குறைக்கும் வேளையில், குறைந்த இலாபத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.

    உலகளவில், அரிசியை அதிகளவு அறுவடை செய்யும் ஆசியாவில் உள்ள அரசாங்கங்கள், இந்த அசாதாரண சூழ்நிலையைத் தவிர்க்க ஆர்வமாக உள்ளன. மேம்படுத்தப்பட்ட தானிய பயிர் விளைச்சலை உயர்த்த, பல நாடுகள் உர மானியங்களை வழங்குகிறது.

    உரங்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா, பிப்ரவரி மாத பட்ஜெட்டில் சுமார் 14 பில்லியன் டாலராக இருந்த விலைவாசி உயர்விலிருந்து, விவசாயிகளைப் பாதுகாக்க சுமார் 20 பில்லியன் டாலர்களை செலவிட திட்டமிட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நெல் சாகுபடி செய்யும் விவசாயி ஒருவர், உரத்தின் விலை உயர்வைத் கையாள்வதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறினார். தேவையான பொருட்களைப் பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டதால், குளிர்காலத்தில் சாகுபடியான பயிருக்கான விளைச்சல், 5-10% குறையும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

    மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைக்கும் அதே வேளையில், விளைச்சலைத் தக்கவைக்கவும் பல முன்னேற்றங்கள் தேவை. முக்கியமாக விவசாயம் செய்யப் பயன்படும் பொருட்களில் விலை உயர்வு இருத்தல் ஆகாது.

    மீண்டும் சர்ச்சையில் ஜெய் பீம்! சூர்யா மற்றும் ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....