Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் கொரோனா நிலை குறித்து என்ன சொல்கிறார் ராதாகிருஷ்ணன்? - தகவல்கள் உள்ளே!

    தமிழகத்தில் கொரோனா நிலை குறித்து என்ன சொல்கிறார் ராதாகிருஷ்ணன்? – தகவல்கள் உள்ளே!

    தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்இ கொரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு வாரம் முன்னரே அறிவித்து இருந்தார்.

    அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்தில் கொரோனா தொடர்பாக எவ்வித புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஆஸ்துமா தினத்தையொட்டி சென்னை தங்க சாலையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி வளாகத்தில் நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவு சார்பில் ஆஸ்துமா தொடர்பான கையேட்டை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது: கொரோனா வைரஸ் தமிழகத்தில் கட்டுக்குள் வந்த நிலையில் மற்ற நோய்கள் பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஐஐடியில் 7300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஐஐடி முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இதே போன்று செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒருவருக்கு வந்த நிலையில் தற்போது 16 பேருக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்றும், ஒரு நாளில் 30 என்பது 70 ஆககூட உயரலாம். நாம் அதை கட்டுப்படுத்தி விட்டோம். தமிழ்நாட்டில் நல்ல கன்ட்ரோலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் அதிகமாக இருப்பதால் சற்று கண்காணிப்பில் உள்ளோம். ஐஐடியில் இருப்பது போன்று செங்கல்பட்டிலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது.

    யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை அதனால் முழு கண்காணிப்பில் உள்ளனர். கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிதாக எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளும் போடவில்லை.

    புதிதாக எதையும் நாங்கள் சொல்லவில்லை. தேவையற்ற பீதியோ அல்லது குழப்பங்களுக்கு மக்கள் ஆளாக வேண்டாம் என்று அவர் தெரிவித்தார். ஆனாலும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.

    மேலும் தமிழகத்தில் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னரே கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘அன்பு வாழும் கூடு’ – வீட்டை எப்படியெல்லாம் கவனிக்கவேண்டும் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....