Tuesday, May 16, 2023
மேலும்
  Homeவாழ்வியல்பராமரிப்பு'அன்பு வாழும் கூடு' - வீட்டை எப்படியெல்லாம் கவனிக்கவேண்டும் தெரியுமா?

  ‘அன்பு வாழும் கூடு’ – வீட்டை எப்படியெல்லாம் கவனிக்கவேண்டும் தெரியுமா?

  உண்ணவும், உறங்கவும், கதை பேசுவும் மட்டுமா வீடு? வெயில், மழை, பனி, குளிர் என அனைத்திலிருந்தும் நம்மைக் காப்பது தான் வீடு.

  நம் துக்கம், சந்தோஷம், கோபம், விருப்பு, வெறுப்பு என அனைத்து உணர்ச்சிகளையும் மவுனமாய் உள்வாங்கிக்கொள்ளும் உயிரற்ற, ஆனால் உயிருக்குயிரான இடம்தான் வீடு.

  கனவு இல்லத்தை எவ்வளவு சிரத்தை எடுத்து கட்டுகிறோமோ? அதே அளவு அதனை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வீடு எப்போதும் புதுபொலிவுடன் காட்சி தரும். வீடு பராமரிப்பு ஒரு கலையாகவே கருதப்படுகிறது.

  பராமரிப்பு:

  வீட்டை பராமரிப்பதற்கு அதனை தூய்மையாக வைத்திருப்பதே முதன்மையான விஷயமாக இருக்க முடியும். பொதுவாக வீட்டில் உள்ள அறைகளை அடிக்கடி பெருக்கி வந்தாலே குப்பைகள் சேருவது குறைந்து சுத்தமாக காட்சி அளிக்க தொடங்கிவிடும்.

  வீடு பொலிவுடன் திகழ அலங்காரமான பொருட்கள் தேவை என்றில்லை. எளிமைதான் என்றுமே அழகு. வீடெங்கும் நிறைந்திருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கினாலேயே வீடு அழகு பெற்றுவிடும்.

  அதேபோல் வாரம் ஒரு முறையாவது வீட்டை கழுவி வருவதும் சிறப்பானதாக அமையும். வெள்ளை நிற வினிகர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்தால் வீடு தூய்மையாக மாறுவதுடன் பளபளப்பாகவும் காட்சி தரும்.

  மேலும், வீட்டு தரையை துடைக்கும்போது தண்ணீருடன் சிறிது வாசனை திரவம் போட்டு துடைத்தால் வீடு கமகமவென்று இருக்கும்.

  வீட்டில் அதிகமான ஈக்களின் தொல்லை இருந்தால் அவற்றினால் கேன்சர் நோய் வரும் என அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி கூறியுள்ளார். ஹெலிக்கோ பேக்டர் பைரோலி என்னும் பாக்டீரியாக்களை ஈக்கள் தங்களுடன் கொண்டு வந்து வீட்டில் உள்ளவர்களுக்கு அல்சர் நோயைக் கொடுக்கிறது. அல்சர் சில நேரங்களில் கேன்சராகவும் மாறவாய்ப்புள்ளது.

  ஈக்களுக்கு புதினா வாசம் ஆகாது!

  ஈக்களுக்கு புதினா வாசம் என்றாலே ஆகாது. எனவே வீட்டில் ஈக்கள் அதிகமாக மொய்க்கும் இடத்தில் புதினா இலைகளைக் கசக்கிப் போடுங்கள். ஈக்கள் வேறு வீடு தேடிப் போய்விடும்.

  கார்பெட்மேல் கறை ஏற்பட்டுவிட்டால் உருளைக்கிழங்கை தேய்த்து பிறகு துணி வைத்து துடைத்தால் கறை மறைந்து விடும். வீடுகளில் எறும்புகள் அதிகமாக உள்ள இடத்தில் சிறிது மஞ்சள் பொடியை தூவினால் எறும்புகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

  மாதமொரு முறை அனைத்து அலமாரிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். சமையலறைப் பொருட்களைச் சரி பார்த்து, வெயிலில் காய வைக்க வேண்டியவற்றை வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும்.

  வீட்டில் போதுமான சூரிய வெளிச்சம் படுமாறு பார்த்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் சிறியதாக இருந்தால் கூட பார்க்க பெரிய வீடு போல தோற்றமளிக்கும்.

  வீட்டிற்கு எந்த ஒரு பொருளை வாங்கும் போதும், அந்த பொருள் வீட்டிற்கு தேவைதானா? வீட்டின் இட அளவிற்கு போதுமானதா? என்பதை யோசித்து வாங்க வேண்டும்.

  அடிக்கடி தூசி பிடிப்பதாக நீங்கள் கருதும் பொருட்கள் மீது விரிப்புகளை விரித்து வையுங்கள். இது உங்கள் வேலையை சுலபமாக்கும்.

  வீட்டின் அனைத்து பகுதிகளிலும் கால்மிதிகள் இருப்பதை உறுதி செய்யுங்கள். இதனால் வீட்டின் தளம் அசுத்தமாகாமல் தடுக்கப்படும்.

  குழந்தைகள் விளையாட்டு பொருட்களை வைத்து எடுப்பது, இடம் நகர்த்துவது போன்ற காரணங்களால் மர பர்னிச்சர்களில் ஏற்படும் சிராய்ப்புகளை அகற்ற, முட்டை மஞ்சள் கருவுடன் வினிகர் சேர்த்து பசை போல் கலக்கி சிராய்ப்பில் பூசி, சில நிமிடங்களுக்குப் பிறகு துடைத்து விடலாம்.

  வீட்டை வெறும் கட்டிடமாக பார்க்காமல் கனவு கட்டி எழுப்பிய கோட்டையாக என்றும் நினைத்து பராமரித்து வந்தால் வீடு பொலிவை இழக்காமல் அழகாக தோற்றமளிக்கும்.

  இன்று பலருக்கும் வீட்டில் செடிகளை வளர்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. எந்த மாதிரியான செடிகளை வளர்க்கலாம், எதை வளர்க்கக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வாஸ்துப்படி, ரோஜா செடிகளைத் தவிர, வீட்டில் முட்கள் நிறைந்த செடிகளை வளர்க்கக்கூடாது. இம்மாதிரியான செடிகள் வீட்டில் எதிர்மறை உருவாக்குகிறது.

  வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் போர் புரிவது போன்ற புடங்களை வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இம்மாதிரியான படங்கள் குடும்ப உறுப்பினர்களை மோசமாக பாதிக்குமாம். எனவே போர் படங்களை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

  வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து முயன்றால் மட்டுமே வீட்டை அழகாகப் பராமரிக்க முடியும். வீட்டைக் கலைநயத்துடன் கட்டமைத்து, உள் அலங்காரம் செய்திருந்தாலும் அதைப் பராமரிப்பதைப் பொறுத்தே வீட்டின் அழகு வெளிப்படும்.

  இதையும் படிங்க; செல்லப்பிராணிகள் என்றால் விலங்குகள் மட்டும்தானா? மகிழ்ச்சியை தரும் இவைகளும் உண்டு!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....