Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்மழையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட புதுச்சேரி வழியாக சென்ற எடப்பாடிக்கு சிறப்பான வரவேற்பு..

    மழையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட புதுச்சேரி வழியாக சென்ற எடப்பாடிக்கு சிறப்பான வரவேற்பு..

    தமிழகத்தில் மழை சேதங்களை பார்வையிட செல்லும் போது புதுச்சேரி வழியாக வந்த தமிழக அதிமுக எதிர்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழையினால் வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க அதிமுக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.

    அப்போது புதுச்சேரி வழியாக சென்ற அவருக்கு புதுச்சேரி முதலியார்பேட்டை மரப்பாலம் சந்திப்பில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

    இதில் மாநில கழக அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில கழக துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜாராமன் ,மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாஸ்கர், மாநில கழக இணைச் செயலாளர் திருநாவுக்கரசு,மாநில கழக துணை செயலாளர்கள் வி.கே.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, குமுதன், காந்தி, மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்கதடைகளை தாண்டி விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ‘ஆர்டெமிஸ் 1’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....