Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு...

    10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு…

    பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அறிவிப்பு.

    பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறைப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்கால போராட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கான மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா, எம்எல்ஏ செந்தில்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு, மாணவர் கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டமைப்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் திமுக அமைப்பாளர் சிவா, இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடை அமல்படுத்தக்கூடாது என முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கூறினோம். அப்போது அதிகாரிகள், இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த மாட்டோம் என கூறினர். ஆனால் இப்போது அரசு வெளியிட்டுள்ள பணி தேர்வு அறிவிப்புகளில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.

    முதலமைச்சர், அமைச்சர்களின் உத்தரவுகளை மீறி செயல்படுவதாக தெரிகிறது. இதை கண்டித்தும் வருகிற 18-ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோதாக தெரிவித்தனர்.

    இதையும் படிங்ககால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; அரசு அறிவித்த நிவாரணம்..நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....