Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு வந்த நாய் உணவு; மன்னிப்பு கோரிய நிறுவனம்...

    லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு வந்த நாய் உணவு; மன்னிப்பு கோரிய நிறுவனம்…

    பிரிட்டனில் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய்க்கு அளிக்கும் உணவு வந்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    உலகளவில் தற்போது பலரும் ஆன்லைனில் ஆர்டர் செய்தே பொருள்களை வாங்கி வருகின்றனர். இப்படியாக வாங்கும்போது பல நேரங்களில் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக வேறு பொருள்கள் வருவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. 

    அந்த வகையில், பிரிட்டனில் ஒருவருக்கு வரவேண்டிய லேப்டாப்பிற்கு பதிலாக நாய்க்கு அளிக்கும் உணவு வந்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரிட்டனைச் சேர்ந்தவர் 61 வயதான ஆலன் வுட் என்பவர் தனது மகளுக்காக அமேசான் தளத்தில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள மேக்புக் புரோ லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார். பிரைமில், அடுத்த நாளே டெலிவரி வரும்படி பணம் செலுத்தியுள்ளார்.

    அதன்படியே, ஆலனுக்கு ஆர்டர் வந்துள்ளது. அப்படி வந்த பெட்டியை ஆலன் திறந்து பார்க்கும்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் நாய்க்கு அளிக்கக்கூடிய உணவான ‘பெடிக்ரீ’ 2 பாக்கெட் இருந்துள்ளது. இந்த அதிர்ச்சிக்குப் பிறகு உடனடியாக அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். 

    ஆனால், அமேசான் நிறுவனமோ லேப்டாப்புக்கான பணத்தைத் திருப்பித்தர மறுத்துள்ளது. இதனால், சுமார் 15 மணி நேரம் அமேசான் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் போனில் பேசியுள்ளார். 

    இதைத்தொடரந்து, பொருளை திருப்பி அளிக்கும் வசதியில், லேப்டாப்புக்கு பதில் வந்த நாய் உணவை அமேசானுக்கே திருப்பி அளித்துள்ளார். இந்தச் செய்தியானது இணையத்தில் வைரலாகியது. இதன்பின்னர், அமேசான் நிறுவன செய்தித் தொடர்பாளர், ஆலன் வுட்டிடம் மன்னிப்பு கேட்டதுடன் பணத்தைத் திரும்பியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

    நடிகர் அஜித்குமார் பெயரில் நடந்த பண மோசடி… அதிர்ச்சியான பெண்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....