Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கால்பந்து உலகக் கோப்பை வெற்றி; மக்களுக்கு விடுமுறை அளித்த அர்ஜென்டினா..

    கால்பந்து உலகக் கோப்பை வெற்றி; மக்களுக்கு விடுமுறை அளித்த அர்ஜென்டினா..

    கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் வென்றமைக்காக அர்ஜென்டினா அரசு தன் நாட்டு மக்களுக்கு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. 

    கத்தாரில், நடந்து வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

    விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாத அளவு இந்த இறுதிப்போட்டியில், பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. 

    இதைத்தொடர்ந்து, கால்பந்து வெற்றியைக் கொண்டாட அர்ஜென்டினா அரசாங்கம், இன்று பொது விடுமுறை என்று அறிவித்துள்ளது. இந்த விடுமுறையின் போது முழு நாடும் “அர்ஜென்டினா அணிக்காக தங்களின் ஆழ்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியும்” என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘ஆம், நாங்கள் உலக சாம்பியன்கள்” என்று (AFA) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது. 

    முன்னதாக,  அர்ஜென்டினாவில் நடைபெறும் கொண்டாட்டத்தை நான் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் எனக்காக காத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அங்கு சென்று அவர்களுடன் அதை அனுபவிக்க என்னால் காத்திருக்க முடியாது என்று கேப்டன் லியோனல் மெஸ்ஸி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    வாரிசு திரைப்படத்திலிருந்து வெளிவந்த மூன்றாவது பாடல்…கவருமா அம்மா சென்டிமென்ட்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....