Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்திறக்க வேண்டாம் என்று எழுதப்பட்ட கல்லறை கண்டுபிடிப்பு.. சபிக்கப்பட்ட கல்லறையா?

    திறக்க வேண்டாம் என்று எழுதப்பட்ட கல்லறை கண்டுபிடிப்பு.. சபிக்கப்பட்ட கல்லறையா?

    யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னம் என்று அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேலுக்குச் சொந்தமான பகுதியில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள கல்லறையின் வாசகம் ஒன்று திகிலை ஏற்படுத்தியுள்ளது.

    கலிலீ பகுதியில் உள்ள மிகப்பழமையான மயானம் ஒன்றில் தொல்லியலாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு குகை மாதிரியான அமைப்பினுள் ‘இந்த கல்லறையினைத் திறக்க வேண்டாம்’ என்று எச்சரிக்கை வாசகம் பொருந்திய கல்லறை ஒன்றினைக் கண்டறிந்துள்ளனர்.

    புராணங்களிலும், கதைகளிலும் இது மாதிரியான சபிக்கப்பட்ட இடங்கள் குறிப்பிடப்படுவது உண்டு. இத்தகைய இடங்களை எந்தக் காரணம் கொண்டும் மனிதர்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த மாதிரியான ஒரு பகுதி நிஜ உலகில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அந்த பகுதியில் உள்ளோரை மட்டுமல்லாது, படிக்கும் நம்மையும் பயம் கொள்ளச் செய்துள்ளது.

    இந்த கல்லறை வாசகமானது ரத்த நிறத்தில் எழுதப்பட்டுள்ளது. வல்லுநர்களின் கூற்றுப்படி, யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட பரம்பரியச் சின்னம் இருக்கும் இடத்தில் இதுபோன்ற வாசகம் அடங்கிய பகுதி கண்டுபிடிக்கப்படுவது 65 வருட காலத்தில் இதுவே முதல்முறையாகும்.

    கல்லறையின் வாசகத்தில் தெரிவித்துள்ளது போலவே இந்த பகுதியானது திறக்கப்படாமல் இருப்பதே நல்லது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    இந்த வாசகமானது பழைய ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டுள்ளது. ‘ஜேக்கப் என்னும் நான், இந்த கல்லறையினைத் திறக்கும் எவரும் சபிக்கப்படுவார்கள் என்று சத்தியம் செய்கிறேன்.’ என்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.

    இந்த வாக்கியத்தினைக் கொண்டுள்ள அந்த கல்லறையினைத் தோண்டக்கூடாது எனவும், இது மனித அழிவிற்கு வழிவகுக்கும் எனவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இஸ்ரேலானது தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலினைப் பகிர்ந்து, ‘நீங்கள் திறக்கக்கூடாத பொருட்கள்:

    பண்டோராவின் பெட்டி

    வீடுகளுக்குள் குடையினைத் திறப்பது

    ஜேக்கப்பின் சத்தியம் பொரித்த 1800 வருட பழமையான கல்லறை.’ என்று குறிப்பிட்டுள்ளது.

     

    இந்த கல்லறையில் இடம்பெற்றுள்ள எழுத்துகளை வைத்துப் பார்க்கும் போது பண்டைய ரோமானிய காலத்தினைச் சேர்ந்ததாய் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் இந்த கல்லறையின் காலத்தினைத் துல்லியமாகக் கணிக்க வரலாற்று ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். மேலும் இந்த வாசகம் எதற்காக எழுதப்பட்டது, இந்த அளவிற்கு எச்சரிக்கை செய்ய என்ன காரணம் என்றும் கண்டறிய முயன்று வருகின்றனர்.

    வீட்ல விஷேசம் திரைப்படத்திற்காக ஆர்ஜே பாலாஜி இவ்வளவு செய்கிறாரா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....