Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇரவில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை: அவதிக்குள்ளாகும் சென்னைவாசிகள்!

    இரவில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை: அவதிக்குள்ளாகும் சென்னைவாசிகள்!

    சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில், பேருந்து சேவை போதிய அளவு இல்லாததால், ஏழை மற்றும் எளிய மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரவு நேரப் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம், என அரசு ஆணை பிறப்பித்துள்ள நிலையில், இரவில் வேலை முடிந்து சற்று தாமதமாக வீடு திரும்ப பேருந்து வசதி இல்லாமல், அவதிப்படுகின்றனர்.

    சென்னை வாழ் மக்களின் போக்குவரத்து தேவையை நிவர்த்தி செய்வதற்காக, 1972 ஆம் ஆண்டு மாநகர போக்குவரத்து கழக பேருந்து சேவை தொடங்கப்பட்டது. அப்போது, 8 பணிமனைகளில், 176 வழித்தடங்களில், மொத்தமாக 1,029 பேருந்துகள் இயக்கப்பட்டது.

    சென்னை மாநகரத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் மாநகர எல்லை விரிவாக்கத்திற்கு உதவும் வகையில், வழித்தடங்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

    இந்த வகையில் தற்போது, 700-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், தினந்தோறும் 2,454 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், 1,559 சாதாரண கட்டண பேருந்துகளும், 1,647 விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளும், 48 ‘ஏசி’ பேருந்துகளும், 207 சிற்றுந்துகளும் அடங்கும்.

    இந்தப் பேருந்துகளில் தினமும், 28.70 இலட்சம் நபர்கள் பயணம் செய்கின்றனர். வேலை, தொழில் மற்றும் படிப்பு உள்பட பல காரணங்களால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களில் இருந்து, சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியேறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னை மாநகர் முழுதும் அனைத்து வழித்தடங்களிலும், போதிய அளவு பேருந்து சேவை இல்லாத காரணத்தால், மக்கள் தவித்து வருகின்றனர். அதே போல, தமிழகத்தை ஆட்சி செய்யும் தி.மு.க., அரசு, சாதாரண கட்டணப் பேருந்துகளில் பயணிக்க பெண்களுக்கு இலவசம் என அறிவித்தது. இது, பெண் பயணியர் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    சாதாரண பேருந்துகள்..

    தொடக்கத்தில் சாதாரண பேருந்துகள் முறையாக இயக்கப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே அதன் சேவை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண கட்டணப் பேருந்துகளை எதிர்பார்த்து மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள், பணிமனைகளில் நேரடி ஆய்வினை மேற்கொண்டு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருப்பினும், கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு, பல பணிமனைகளிலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பலர், நீண்ட நாள் விடுப்பில் செல்வது தொடர்கதையாகி உள்ளது. இதுதவிர, போதிய அளவு ஊழியர்கள் இல்லாத காரணத்தாலும், மாநகர பேருந்து போக்குவரத்து சேவையில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்து ஆணைப் பிறப்பித்தது. இது, பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதியும் எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், அதற்கு ஏற்றார் போல், பொதுப் போக்குவரத்துக்கான பேருந்து வசதி செய்யப்படவில்லை.

    இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், இரவு 12 மணிக்கு மேல் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்படுகின்றது. இரவு நேரத்தில் பணி முடிந்து தாமதமாக வீடு திரும்புவோர், பேருந்து சேவையைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க பொதுச்செயலர் தயானந்தன் கூறுகையில், மாநகர போக்குவரத்து கழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. ஒரு பேருந்துக்கு, 7.5 ஆக இருந்த பணியாளர் எண்ணிக்கை, இப்போது 6.05 ஆக குறைந்துள்ளது. அதுபோல, 2 ஆண்டுகளுக்கு முன், பணி ஓய்வு காலம் நீட்டிக்கப்பட்டவர்கள், கடந்த மே மாதம் முதல் ஓய்வு பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநகர போக்குவரத்து கழகத்தில், 107 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அதுபோல், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணிகளை தவிர்த்து, இதர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால், 20 சதவீத மாநகர பேருந்துகளின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாக தயானந்தன் கூறினார்.

    காவல் வாகனத்தின் மேல் ஒரு உல்லாசப்பயணம் சென்ற வாலிபர்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....