Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்32 பேர் கொல்லப்பட்ட கொடூர சம்பவம்; வடமேற்கு மாநிலங்களில் நிலையற்ற ஆளுமை!

    32 பேர் கொல்லப்பட்ட கொடூர சம்பவம்; வடமேற்கு மாநிலங்களில் நிலையற்ற ஆளுமை!

    நைஜீரியாவின் வடமேற்கு மாநிலங்களில் நிலையற்ற ஆளுமை நிலவி வருகின்றது. இதனால் அங்கு துப்பாக்கிச் சூடுகள், வீடுகளை சூறையாடுதல் போன்றவை அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இங்குள்ள கடுனா பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த தாக்குதல்களில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றும் பல வீடுகளை இடித்துள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வடமேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவில் கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்படும் கனரக ஆயுதங்கள் ஏந்திய குற்றக் கும்பல்கள் பல ஆண்டுகளாக குடியிருப்பு வாசிகளைக் கடத்துதல், அல்லது கொன்றுவிடுதல், கிராமங்களைச் சோதனை செய்தல் என குற்ற செயல்கள் பெருகி நாட்டிற்கே வெட்கக்கேடாக மாறிவிட்டன. சமீபத்திய மாதங்களில், அவர்கள் தலைநகர் அபுஜாவிற்கும் கடுனா நகருக்கும் இடையே ஒரு பயணிகள் ரயிலைத் தாக்கி பலரை கடத்திச் சென்றுள்ளனர். 100 க்கும் மேற்பட்ட கிராம மக்களை படுகொலை செய்துள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை, ‘கஜுரு உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள டோகோன் நோமா, உங்வான் சார்கி மற்றும் உங்வான் மைகோரி கிராமங்களை கொள்ளையர்கள் தாக்கினர்’ என்று மாநில பாதுகாப்பு ஆணையர் சாமுவேல் அருவான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர்கள் ‘மோட்டார் சைக்கிள்களில் அதிக எண்ணிக்கையில் அந்தப் பகுதிக்குள் வந்து தாக்கியுள்ளனர். மேலும், பல வீடுகளை இடித்துத் தள்ளியும், உள்ளூர் மக்களைத் தாக்கி குன்றுகளில்’ என்று அவர் கூறினார்.

    ஆயுதம் ஏந்தி வந்த இந்த கும்பல் முதலில் இரண்டு இடங்களைத் தாக்கி 31 குடிமக்களைக் கொன்றுள்ளனர். பின்னர் அவர்கள் அருகிலுள்ள மற்றொரு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்கு ஒருவரைக் கொன்றதோடு மற்றும் சில வீடுகளை எரித்தும் உள்ளனர்,” என்று அருவான் கூறினார்.

    ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்கள் 2021 இல் 2,600 பொதுமக்களைக் கொன்றனர், இது 2020 ஐ விட 250 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    போதைக்கு அடிமையான கணவனின் முகத்தில் கொதிக்கும் ரசத்தினை ஊற்றிய மனைவி!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....