Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் 14 லட்சத்திற்கு ஏலம்....

    உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் 14 லட்சத்திற்கு ஏலம்….

    ‘மது என்பது உங்களது கேள்விக்கான பதில் அல்ல; மது.. உங்களது கேள்வியினை மறக்கச் செய்யும் ஒன்று..’

    இப்படி மதுவினைப் பற்றி பல கவிதைகள் சமூக வலைதளமெங்கும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மொபைல் இல்லாத மனிதர்களை பார்ப்பதை விட ‘மது’ இல்லாத மனிதர்களைப் பார்ப்பது நாள்தோறும் அருகி வந்துகொண்டிருக்கிறது.

    சாமானியர்கள் முதல் செல்வாக்கு மிக்கவர்கள் வரை அனைவரும் மதுவினை தங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருக்கிறது. மதுவிற்காக எதுவும் செய்யத் துணியும் இந்த காலத்தில், உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் 14 லட்சம் மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ள நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த விஸ்கி பாட்டிலின் பெயர் இன்டரேபிட் ஆகும்.

    ஐந்து அடி பதினோரு இன்ச் உயரமுள்ள இந்த பாட்டில் செப்டம்பர் 2021ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. 311 லிட்டர் விஸ்கி கொள்ளளவு கொண்டுள்ள இந்த விஸ்கி பாட்டிலானது, 444 பொதுவான விஸ்கி பாட்டிலுக்கு சமமாகும்.

    ‘ஊரடங்கு காலத்தில் சிறந்த வல்லுனர்களிடம் கலந்தாலோசித்தேன். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து இந்த பாட்டிலை தயாரித்தது மட்டுமல்லாது, அதனுள் விஸ்கியையும் வெற்றிகரமாக ஊற்றியுள்ளோம்.’ என்று இந்த திட்டத்தின் நிறுவனர் டேனியல் மோங்க் கூறியுள்ளார்.

    இந்த பாட்டிலினுள் உள்ள மதுபானமானது 32 வருடங்கள் பழமையானது. வெளிர் தங்க நிறத்தினைக் கொண்டுள்ள இந்த மதுபானமானது, இனிப்பான ருசியினைக் கொண்டுள்ளது.

    இந்த விஸ்கி பாட்டில் 14 லட்சம் டாலருக்கு விற்கப்பட்டாலும், 2018ம் ஆண்டு ஏலம் போன மக்கல்லன் என்கிற மதுபாட்டிலே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த மக்கல்லன் பாட்டலிலானது 15லட்சம் டாலருக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விஸ்கியின் பெயரில் 11 ஆய்வாளர்களின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. ‘எனது தந்தை எப்பொழுதும் சாகசத்தினையும், ஆய்வுகளையும் விரும்புபவர். அவரால் நான் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளேன்’ என்று நிறுவனர் டேனியல் மோங்க் கூறியுள்ளார்.

    இந்த ஏலத்தில் கிடைக்கும் விலையில் பெரும்பாலான தொகை தொண்டு நிறுவனங்களுக்கு போய்சேரும் என்று அதன் நிறுவனர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம் வெளியாகும் அதே நாளில் மீண்டும் வெளியாகும் கேஜிஎஃப்! – கொளுத்துங்க வெடிய…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....