Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்குடிநீர் வராததால் ஆத்திரமடைந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

    குடிநீர் வராததால் ஆத்திரமடைந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

    புதுச்சேரியில் பாலம் கட்டுவதற்காக பள்ளம் நோண்டியபோது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு இரண்டு நாளாக குடிதண்ணீர் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி அரும்பார்த்தபுரம் தக்ககுட்டை பகுதியில் புதுச்சேரி விழுப்புரம் நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் கட்டும் வேலை நடைபெறுவதற்காக வாய்க்கால்
    தோண்டப்பட்டுள்ளது. அப்போது தக்ககுட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் நேற்று காலை முதல் குடிநீர் வழங்கப்படவில்லை.

    இதுவரை அதிகாரிகள் சரிசெய்யாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை தக்ககுட்டை பகுதியில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், நகராட்சி இளநிலை பொறியாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடிநாக குடிநீர் இணைப்பு சரிசெய்யப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    விஷாலின் லத்தி திரைப்படம்; வெளிவந்த ‘வீரத்துக்கு ஓர் நிறமுண்டு’ என்ற பாடல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....