Thursday, March 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆண்ட்ரியா - தமிழ் சினிமாவின் ஆர்டிஸ்ட்!... பிறந்தநாள் ஸ்பெஷல்!

    ஆண்ட்ரியா – தமிழ் சினிமாவின் ஆர்டிஸ்ட்!… பிறந்தநாள் ஸ்பெஷல்!

    ஆண்ட்ரியா – இசையும் நடிப்புமாய் தமிழ் ரசிகர்களை ஆட்கொள்ளும் தமிழ் சினிமாவின் ஒரு ஆர்டிஸ்ட்!

    பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் பலருக்கு அறிமுகம் ஆனவர்தான், ஆண்ட்ரியா ஜெர்மியா. ஆங்கிலோ இந்தியர் என்று கூறினாலும், தமிழ் கதாப்பாத்திரங்களுக்கு மிகவும் பொருந்த கூடியவராக இவர் இருக்கிறார் என்பதில் இதுவரை மாற்றுக் கருத்து எழுந்ததே இல்லை. 

    பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தைக்கண்ட பின் யார் என்று ஆண்ட்ரியாவை பலரும் கேட்க, இணையத்தில் இவரை பற்றி பலரும் தேட பாடகராகவும் பின்னணி குரல் கொடுப்பவராகவும் ஆண்ட்ரியா தெரிந்தார்.

    ‘கற்க கற்க ” என தொடங்கும் வேட்டையாடு விளையாடு படத்தின் பாடலை, ஆண்ட்ரியா பாடியுள்ளார். அதன் பின்பு 2008-ல் பலரும் இது யாருடையக் குரல் என்று வியந்த பாடல்தான், ‘ஹோ பேபி ஹோ பேபி’ என தொடங்கும் யாரடி நீ மோகினி படத்தின் பாடல். சர்வம் திரைப்படத்தில் ‘அசத்தலாம் வா’ பாடலில் இளையராஜாவோடு இணைந்து ஆண்ட்ரியாபாடிய பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின்பு 2010 இல் இருந்து ஆண்ட்ரியா பாடினாலே ஹிட் தான் என்று உருவாகிய நிலமை இப்ப வரை நீடித்துக்கொண்டிருக்கிறது.

    ஆங்கிலப் பாடல்களையும், உற்சாகமூட்டும் பாடல்களையும் பாடிய ஆண்ட்ரியா, ‘மாலை நேரம்’ எனும் பாடலின் வழியே தனக்கு மெலடியும் வரும் என்பதை இசை உலகுக்கு நிருபித்தார். இன்றளவும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வெளியாகமல் போன, இப்பாடலை பலர் தங்களின் பிடித்த பாடலின் வரிசையில் வைத்து இருப்பது ஆண்ட்ரியாவின் குரலுக்கு கிடைத்த அங்கிகாரம். பாடல் பாடுவது மட்டும் அல்லாது, தானே இசையமைத்து பாடல் பாடும் திறமையையும் பெற்றவர் ஆண்ட்ரியா.

    பாடகராக தெரிந்த ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுப்பவராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். வேட்டையாடு விளையாடு படத்தில் கமலினிக்கும், ஆடுகளம் திரைப்படத்தில் டாப்சிக்கும், நண்பன் திரைப்படத்தில் இலியானாவுக்கும் குரல் கொடுத்தவர், தங்கமகன் திரைப்படத்தில் எமி ஜாக்சனுக்கும், அவேஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தில் ஸ்கார்லெட்டிற்கும் தனது பின்னணி குரல் கொடுத்து பலரையும் கவர்ந்தார், 

    ஆண்ட்ரியா எனும் நடிகை:

    கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்தாலும், தற்போதைய தமிழ் சினிமாவில் பலரும் முன்னெடுக்க தயங்கும் கதாப்பாத்திரங்களை துணிந்து நடித்து, அக்கதாப்பாத்திரதிற்கு நான்தான் தகுதியானவர் என படம் பார்ப்பவர்கள் நினைக்கும் அளவிற்கு, தன் நடிப்பை வெளிப்டுத்திச் செல்லும் ஒரு ஆர்டிஸ்ட்தான், ஆண்ட்ரியா! 

    உதாரணத்திற்கு..ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, உத்தம வில்லன், அவள், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, சமீபத்தில் வெளிவந்த அனல் மேலே பனித்துளி போன்ற படங்களை கூறலாம். மேற்சொன்ன படங்களின் கதாப்பாத்திரத்தில் நான் யார் என்பதை தன் நடிப்பால் திரையுலக ரசிகர்களுக்கு தெரியச் செய்திருப்பார் ஆண்ட்ரியா! திறமையும் துணிவும் ஒருங்கே அனைவருக்கும் அமைந்து விடாது அப்படியான அமைதலை தன் உழைப்பால் தனக்கு சாத்தியப்படுத்திக் கொண்ட நடிகைகளுள் ஒருவர்தான் ஆண்ட்ரியா.

    பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வரும் ஆண்ட்ரியாவுக்கு இன்று பிறந்தநாள்! ஆண்ட்ரியா எனும் ஆல்ரவுண்டர் ஆர்டிஸ்டுக்கு இனிய பிறந்தநாள் வாழத்துகள்! 

    முத்தத்தால் ஆரம்பித்த சிம்புவின் பாடல்…மிரட்டிய ஷ்ரேயா கோஷல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....