Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்....உயரும் உயிர் பலி

    சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்….உயரும் உயிர் பலி

    சீனாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    கடந்த வாரம் சீனாவின் சிசுவான் மாகாணத்தின் தரைக்கு கீழே பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பல வீடுகள், கட்டடங்கள் இடிந்ததுடன் மலைப்பாங்கான பகுதிகளில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டது. உயிரிழப்பும் இதனால் அதிகரித்தது. 

    இந்நிலையில்,  இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

    சிசுவான் மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93-ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, அந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி 25 பேர் மாயமாகியுள்ளனர்.

    அவர்களையும், இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடிய மற்றவர்களையும் மீட்பதற்கான தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான் மாகாணத்தில் கடந்த 5-ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.8 அலகுகளாகப் பதிவானது. இதில் மாகாண தலைநகர் செங்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    ஏற்கெனவே அந்த நகரில் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நிலநடுக்கத்துக்குப் பின்னரும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை உள்ளூர் நிர்வாகம் தொடர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....