Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்"கால்களில் கொப்பளங்கள் வந்தாலும் நிற்காது என் பயணம்" - ராகுல் காந்தி உற்சாக பேச்சு...

    “கால்களில் கொப்பளங்கள் வந்தாலும் நிற்காது என் பயணம்” – ராகுல் காந்தி உற்சாக பேச்சு…

    காலில் ஏற்படும் கொப்புளங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்றும், இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற ஒன்றை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடங்கியுள்ளார். இதன் நோக்கம் என்னவெனில் இந்தியாவை இணைக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த திட்டமானது, கடந்த புதன் (செப்டம்பர் -7) அன்று கன்னியாகுமரியில் துவங்கப்பட்டது. 

    கேரளத்தில் செவ்வாய்க்கிழமை 3-ஆவது நாளாக நடைப்பயணத்தை தொடங்கிய அவர், மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடையும் இல்லாமல் மக்களைச் சந்தித்தார்.

    இந்த நடைப்பயணத்தில் பங்கேற்கும் சக காங்கிரஸாரின் கால்களில் கொப்புளம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதை மேற்கோள்காட்டி ட்விட்டரில் ராகுல் காந்தி கூறுகையில், ‘கால்களில் கொப்புளம் ஏற்பட்டாலும் நாங்கள் நிற்கப் போவதில்லை. நாட்டை ஒருங்கிணைப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.

    ராகுல்காந்தியின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

    இதையும் படிங்க: நாங்க பொண்ணு தரோம்.. கல்யாணம் பண்ண நீங்க ரெடியா? ராகுலை வெட்கப்பட வைத்த குமரி பெண்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....