Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மாநில அந்தஸ்து தேவை என ரங்கசாமி கூறுவது நாடகத்தின் மிகப்பெரிய உச்சம்; எதிர்கட்சி தலைவர் இரா.சிவா

    மாநில அந்தஸ்து தேவை என ரங்கசாமி கூறுவது நாடகத்தின் மிகப்பெரிய உச்சம்; எதிர்கட்சி தலைவர் இரா.சிவா

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என முதல்வர் ரங்கசாமி கூறுவது நாடகத்தின் மிக பெரிய உச்சகட்டம் என மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி மாநில திமுக மற்றும் காமராஜ் நகர் தொகுதி திமுக சார்பில்
    பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிறைவு கூட்டம் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் சாரம் அவ்வை திடலில், நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி மற்றும் தலைமை கழக சிறப்பு பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் ஏழை, எளிய பெண்களுக்கு தையல் இயந்திரம், தள்ளு வண்டி மற்றும் புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    பொதுகூட்டத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா, பாஜகவை நம்பி சென்ற முதல்வர் ரங்கசாமி முழித்து கொண்டு இருக்கிறார். தற்போது
    மாநில அந்தஸ்து தேவை என முதல்வர் ரங்கசாமி கூறுவது நாடகத்தின் மிக பெரிய உச்சகட்டம். மாநில அந்துஸ்து கேட்டு எதையும் முதல்வர் செய்யவில்லை.
    மத்தியில் பாஜக ஆட்சி தானே நடக்கிறது. மாநில அந்தஸ்தை பெற வேண்டியது தானே?எல்லாம் நாடகம் தான் என குற்றம்சாட்டினார்.

    மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் எப்போது வழங்கப்படும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....