Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ஆறு விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்..

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: ஆறு விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்..

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் முடிவில் வங்கதேச அணி 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. 

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, கடந்த 14-ஆம் தேதி காலை 9 மணியளவில் சிட்டகாங்கில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

    இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முனது இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதன்பின்பு, இந்திய அணியானது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க,  258 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய டிக்ளர் செய்தது. இதைத்தொடர்ந்து, முதல் டெஸ்டை வங்கதேச அணி வெற்றி பெற 513 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-வது நாள் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தது. 10 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 471 ரன்கள் தேவைப்பட்டன.

    இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் வங்கதேச தொடக்க வீரர்கள் ஷான்டோவும் ஜாகீர் ஹசனும் சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தனர். வங்கதேச அணி 2-வது இன்னிங்ஸில் 4-வது நாள் உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்தது. 

    இந்த விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், உமேஷ் யாதவ் முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். இதை அடுத்து வந்த யாசிர் அலியை 5 ரன்களில் தனது விக்கெட்டை வீழ்த்தினார். லிட்டன் தாஸ் 19 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, மேலும் மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்தியது. 

    மொத்தத்தில்,  4-வது நாள் முடிவில் வங்கதேச அணி 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 40, மெஹிதி ஹசன் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். வங்கதேச அணியின் வெற்றிக்கு மேலும் 241 ரன்கள் தேவைப்படுகின்றன. 

    மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் எப்போது வழங்கப்படும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....