Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஆவீன் பால், நெய் விலையேற்றத்தை தொடர்ந்து வெண்ணெய் விலையும் அதிகரிப்பு!

    ஆவீன் பால், நெய் விலையேற்றத்தை தொடர்ந்து வெண்ணெய் விலையும் அதிகரிப்பு!

    ஆவின் நிர்வாகத்தின் பால் நெய் விலையேற்றத்தை தொடர்ந்து வெண்ணெய் விலையயும் இன்று உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் வேளாண்மை கால்நடை விவசாயிகளிடம் ஆவீன் பால் கொள்முதல் செய்து மக்களுக்கு தட்டுபாடுகள் இல்லாமல், பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்காக ஆரஞ்சு நிற பால் 12 ரூபாய் விலை உயர்தபட்டது.

    இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் கொள்முதல் செய்து வாங்கப்படும் பாலை கொண்டு தயிர், மோர், நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூர் பாக்கு, குலாப் ஜாமுன், ரசகுல்லா உள்ளிட்ட 235 வகையான பால் உப பொருட்களை தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் ஆவின் நிறுவனத்தின் பிரிமியம் நெய் நேற்று லிட்டருக்கு 50 ரூபாயும், 5 லிட்டருக்கு 350 ரூபாயும் விலை உயர்த்தி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு நேற்று வெளியாகியது. இதனால் நடப்பாண்டில் மட்டும் ஆவின் நெய் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது.

    ஆவின் நிர்வாகத்தின் இந்த விலையேற்ற உயர்வை கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் வெண்ணெய் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் சமையல் பயன்பாடிற்கான உப்பு கலக்காத வெண்ணெய், 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் 250 ரூபாயிலிருந்து 260 ரூபாயக உயர்த்தபட்டுள்ளது.

    இதேபோல் உப்பு கலந்த வெண்ணெய் 100 கிராம் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாயக உயர்த்தியும், 200 கிராம் சிரிய வெண்ணெய் துண்டு 130 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக உயர்த்தி
    ஆவீன் நிர்வாகம் உத்தரவு பிறபித்துள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கபட்டுள்ளது.

    ‘விஜய், அஜித் என வித்தியாசம் பார்க்கமாட்டோம்’ – திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....