Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை சார்பில் மின்சார வாகன கண்காட்சி; தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை சார்பில் மின்சார வாகன கண்காட்சி; தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

    புதுச்சேரியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை சார்பில் காமராஜர் மணி மண்டபத்தில் நடைபெற்ற மின்சார வாகன கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

    நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மின் வாகனத்தை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை சார்பில் காமராஜர் மணி மண்டபத்தில் மின்சார வாகன கண்காட்சியில் துவக்க விழா என்று நடைபெற்றது.

    4 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட மின்சார வாகன இரு மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் 4 இ-வாகன கார் டீலர்கள் கலந்து கொண்டு தங்கள் தயாரிப்புகளை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்துகின்றனர். நிதி நிறுவனங்களும்/வங்கிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன.

    விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர் திரு நமச்சிவாயம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, .சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம். அரசு செயலர் அருண் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தனியார் கல்லூரி மாணவிகள் முடியை வெட்டி நூதன போராட்டம்; எதற்கு தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....