Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபொங்கலுக்குள் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் - முதலமைச்சர் பேட்டி!

    பொங்கலுக்குள் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் – முதலமைச்சர் பேட்டி!

    பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை தரும் திட்டம் பொங்கலுக்குள் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்ச ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

    புதுச்சேரி சட்டபபேரவை வளாகத்தில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது; 

    அரசின் மாதாந்திர உதவித்தொகை எதுவம் பெறாத 21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருந்தோம். இத்திட்டம் வரும் பொங்களுக்குள் தொடங்கப்படும்.

    பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.34-ல் இருந்து ரூ.37 என உயர்த்தி கொள்முதல் செய்யப்படும். மேலும், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை இனி மாதந்தோறும் 5% ஊக்கத்தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விலை உயர்வு இன்று (29-12-22) முதல் அமலுக்கு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    மேலும், ‘பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் தீவனம் தருவதற்காக அவர்களின் வங்கிகணக்கில் பணம் செலுத்தவுள்ளோம். இதற்கு ரூ. 4.5 கோடி ஒதுக்கியுள்ளோம். விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செய்து பாண்லேக்கு தந்தால் 50 சதவீத மானியம் தருவோம். இதற்கு முதல்கட்டமாக ஆயிரம் மாடுகள் வாங்க மானியம் தரவுள்ளோம்’ எனவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

    கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்; உலகளவில் ரசிகர்கள் அஞ்சலி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....