Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபொங்கல் தொகுப்பு எப்படி? மாநில அந்தஸ்து நிலைப்பாடு என்ன? - பதிலளித்த முதலமைச்சர்..

    பொங்கல் தொகுப்பு எப்படி? மாநில அந்தஸ்து நிலைப்பாடு என்ன? – பதிலளித்த முதலமைச்சர்..

    பொங்கல் தொகுப்பு குறித்த குளறுபடிகளுக்கும், மாநில அந்தஸ்து குறித்த போராட்டத்துக்கும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்துள்ளார். 

    புதுச்சேரி ரேஷன் கடையை மீண்டும் திறந்து பொங்கல் தொகுப்புகளை வழங்க வேண்டும் என்றும், நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்தப் போராட்டம் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் பத்திரிக்கையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். 

    அந்த கேள்விக்கு, ‘ பொங்கலையொட்டி அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ. 470 மதிப்புள்ள பொங்கள் பொருட்கள் அங்கன்வாடி மூலம் தரப்படும். ரேஷன்கடைகளைத் திறந்து பொருட்களை தருவதுதான் அரசின் எண்ணம். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.’ என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

    மேலும், பொங்கல் தொகுப்புக்கு ரூ. 17.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு ரூ.2400 மானியமும், மஞ்சள் அட்டைத்தாரர்களுக்கு ரூ. 1200 மானியமும் பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளதாகவும் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதற்கு ரூ. 67 கோடி ஒதுக்கியுள்ளோம் எனவும் அவர் கூறினார். 

    இதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

    அதற்கு, ‘மாநில அந்தஸ்து பெற வரும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். அனைத்து எம்எல்ஏக்களையும், அமைப்பினரையும் டெல்லி அழைத்து சென்று பிரதமரை சந்திப்போம். தொடர்ந்து போராடி கேட்டுக் கொண்டிருந்தால்தான் கிடைக்கும். சுதந்திரம் உட்பட எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மாநில அரசு எங்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை’ என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    பொங்கலுக்குள் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் – முதலமைச்சர் பேட்டி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....