Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்; உலகளவில் ரசிகர்கள் அஞ்சலி..

    கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்; உலகளவில் ரசிகர்கள் அஞ்சலி..

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கால்பந்து ஜாம்பவான் பீலே வியாழக்கிழமை நள்ளிரவு காலமானார். 

    கால்பந்து உலகின் ஜாம்பவான், பீலே. இவருக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததால் கடந்த 2021 செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார். 

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் பீலேவின் உடல்நலம் மிகவும் மோசமடைந்ததால், அவர் சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    இதன்பின்பு, அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், சிறுநீரகம் மற்றும் இருதய செயல்பாடுகள் குறைந்து வருவதாகவும் மருத்துவர்கள் சமீபத்தில் தெரிவித்தனர். 

    இந்நிலையில், பீலே சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 82. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேஸிலுக்காக மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்று தந்துள்ள பீலே, மொத்தமாக 700 ஆட்டங்களில் 655 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். 

    தற்போது பீலேவின் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; எரிந்த கார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....