Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்சோமேட்டோவில் காஃபி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    சோமேட்டோவில் காஃபி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்று சோமேட்டோ. தினமும் பலர் இந்த சோமேட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களுடன் உணவு டெலிவரியில் தாமதம், பார்சலை மாற்றி கொடுத்தது உள்ளிட்ட சண்டை சச்சரவுகள் இருந்தன.

    ஒரு நிறுவனத்தின் ஊழியர் உணவில் எச்சில் துப்பிய சம்பவம், பாதி உணவை சாப்பிட்டுவிட்டு அந்த பேக்கிங்கை வாடிக்கையாளரிடம் கொடுத்த சம்பவம் என நிகழ்ந்த தவறுகளை அடுக்கி கொண்டே போகலாம்.

    அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒருவர் ஆர்டர் செய்த காஃபியில் சிக்கன் துண்டு இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த சுமித் சவுரப் என்ற நபர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “சோமேட்டோ செயலி மூலம் காஃபி ஒன்றை ஆர்டர் செய்தேன். அந்த காஃபியில் ஒரு சிக்கன் துண்டு இருந்தது. இன்றுடன் உங்களுக்கும் எனக்குமான தொடர்பு முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கு மன்னிப்பு கேட்ட சோமேட்டோ நிறுவனம், இந்த சுமித்திற்கு இலவச ப்ரோ உறுப்பினர் சேவையை வழங்கியுள்ளது. இதையும் குறிப்பிட்ட சுமித், தவறுகளை செய்துவிட்டு இனி நீங்கள் என்னுடைய நன்மதிப்பை பெற முடியாது என பதிவிட்டுள்ளார்.

    நானே சிக்கன் துண்டை காபியில் போட்டு விட்டதாக பலர் கருத்து பதிவிடுகிறார்கள். என்னை மன்னித்துவிடுங்கள், நீங்கள் குடிக்கும் இதே பானத்தில் உங்களுக்கும் ஒரு நாள் இந்த அனுபவம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

    நவராத்திரியின் போதும் இது போன்ற மிகப் பெரிய தவறு ஒன்று நடந்தது. நான் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தேன், ஆனால் சிக்கன் பிரியாணி பார்சல் வந்தது. அப்போதும் இனி தவறுகள் நடக்காது என சோமேட்டோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது உணவகம் செய்த தவறு, இதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றது. போதும்டா இனி நமக்குள் எந்த பிசினஸும் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சோமேட்டோவும் தேர்டு வேவ் இந்தியாவும் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் இது போன்ற அனுபவங்களால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இது யாருடைய தவறு என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன் இனியாவது அதிகபட்ச கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் ட்விட்டர் வாசிகள் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....