Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்தமிழ்நாடுகிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் - தல தோனி நெகிழ்ச்சி

  கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் – தல தோனி நெகிழ்ச்சி

  கிரிக்கெட் விளையாட்டிலும் சரி, இந்திய மக்கள் மனதிலும் சரி தனக்கென தனி முத்திரை பதித்து “தல” தோனி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணியின் ஈடு இணையில்லாத தலைவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் தோனி ஆவார்.

  திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான சீனிவாசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

  கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் , சதுரங்கம் , கால்பந்து , தடகளம் , மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு தோனி விருதுகளை வழங்கினார் .

  இதன் பின்னர் பேசிய மகேந்திர சிங் தோனி, மாவட்ட கிரிக்கெட் சங்க கூட்டத்தில் நான் பங்கேற்பது இதுதான் முதன்முறை. சென்னையில் இருந்தபடி எனது ராஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன். சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன்.

  பள்ளியளவிலான கிரிக்கெட் விளையாட்டிலிருதே நான் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவிலான போட்டிகள் மூலம் பல வீரர்கள் உருவாகியுள்ளளர். மாவட்டளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடினால் தேசிய அளவிலான போட்டியில் விளையாட வாயப்பு கிடைக்கும்.

  திறமையான வீர்ர்களை உருவாக்குவதில் மாவட்ட கிரிக்கெட் அமைப்புகளுக்கு பொறுப்புகள் அதிகம். கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும். 25 வது விழாவை கொண்டாடும் இந்த சங்கம் , 50 ம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாட வேண்டும். ரஞ்சி , ஐபிஎல் , இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும் என்று மகேந்திர சிங் தோனி கேட்டுக் கொண்டார்.

  தோனியை ஜார்கண்ட் அரசாங்கம் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க ஸ்கூல் செல்வோம் நாம் என்கிற விளம்பரத்தில் நடிக்கக் கூப்பிட்ட பொழுது ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு – தீட்சிதர்கள் எதிர்ப்பு; அமைச்சர் அதிரடி!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....