Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅமல்படுத்தப்படுமா, பழைய ஓய்வூதியத் திட்டம்? - மக்கள் எதிர்பார்ப்பு!

    அமல்படுத்தப்படுமா, பழைய ஓய்வூதியத் திட்டம்? – மக்கள் எதிர்பார்ப்பு!

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி CPS ஒழிப்பு அமைப்பினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

    2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. எனினும், 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    பழைய பென்சன் திட்டம்..

    தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது. தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன.

    பழைய பென்சன் திட்டத்தை ஒரு சில மாநிலங்கள் அமல்படுத்திவிட்டன. சமீபத்தில் கோவாவில் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு விஷயங்களில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் தமிழகத்தில் ஏன் இத்திட்டம் அமல்படுத்தப்படவில்லை என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து CPS ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் அரசு ஊழியர்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

    2021 சட்டமன்ற தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்களின் ஆதரவும் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்தது. ஆனால், தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை கட்டாயம் செயல்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மறுப்பது நியாயம் ஆக இல்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துமாறு சேலம் மாவட்ட வணிக வரித் துறை பணியாளர்கள், பள்ளிக் கல்வித் துறை பணியாளர்கள் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோல, பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் சார்பாக CPS ஒழிப்பு அமைப்பினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

    பென்சன் திட்டத்துக்காக ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையை தமிழக அரசு வேறு பக்கம் பயன்படுத்துகிறதா எனவும் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பணத்தை வேறு பக்கம் பயன்படுத்தவில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என்று CPS ஒழிப்பு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், 60 வயது வரை பணி செய்து ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மரண தண்டனை விதிப்பது போல அரசின் இந்த நடவடிக்கை இருப்பதாகவும், கடைசிக் காலத்தில் மருத்துவச் செலவுகளுக்குக் கூட கையேந்தும் அவல நிலை ஏற்படும் எனவும் இவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் – தல தோனி நெகிழ்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....