Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்ஒரே பொருள்தான் ஆனா கஸ்டமர்ஸ பொறுத்து விலை மாறும்; இதென்ன புது டெக்னிக்...

    ஒரே பொருள்தான் ஆனா கஸ்டமர்ஸ பொறுத்து விலை மாறும்; இதென்ன புது டெக்னிக்…

    ‘ஓனர்னா பெரிய ஆளா’ அப்டிங்குற நிலமை மாறி இப்போ ‘கஸ்டமர்னா பெரிய ஆளா..என்னவேனா பண்ணலாமா’ அப்படிங்குற நிலமை இப்போ வந்துருக்கு. பொட்டிக்கடையில ஆரம்பிச்சு ஆப்பிள் கம்பெனி வரைக்கும் ‘கஸ்டமர்தான் பெரிய ஆளு’  அதுல மாற்றுக்கருத்துலாம் இல்ல..ஆனா இத சாதகமா நெனச்சிட்டு, சில கஸ்டமர் பண்றதெல்லாம் ‘டூ மச்’. எம்பிளாயிஸ்ட திமிரா நடந்துக்குறது, வெயிட்டர்ஸ அதட்டுறது, டிரைவர ஒருமையில பேசுறதுனு கஸ்டமர்ஸ் பண்ற சில பிஹெவியர்ஸ் ஓவராதான் இருக்கு. 

    ‘அதுக்கு என்ன பண்ண முடியும், வேற வழியில்ல, கஸ்டமர்ஸ்னா எல்லா விதமாவும் இருக்கத்தான் செய்வாங்க’… அப்டினு நெனச்சிட்டு, சகிச்சிட்டு வாழாம, ஒரு கஃபே ஷாப் புதுவித ஐடியோவோட பிஸ்னஸ்ல களமிறங்கிருக்கு. அதென்ன ஐடியா? அப்படிங்குறத இந்த வீடியோவுல பார்க்கலாம் வாங்க…

    இங்கிலாந்துல பிரெஸ்ட்டான் அப்படிங்குற பகுதியில 29 வயசான உஸ்மான் ஹூசைன் நடத்திட்டு வர  கஃபே ஷாப்தான் ‘சாய் ஸ்டாப்’ . இந்த இடத்துல சில கஸ்டமர்ட, அவுங்க சாப்பிட்ற டிஷ்-ஷூக்கு பணம் அதிகமாகவும், சில கஸ்டமர்ட பணம் கம்மியாகவும் வாங்குறாங்க..

    அதாவது, ‘சாய் ஸ்டாப்’-க்கு வர கஸ்டமர்ஸ் ஆர்டர் எப்படி சொல்லுறாங்கன்றத பொறுத்து அவுங்களுடைய ‘பில் அமவுண்ட்’ சேஞ்ச் ஆகும். கஸ்டமர்ஸ் ரொம்ப மரியாதையா, சாஃப்ட்டா ஆர்டர் பண்ணா அவுங்களுக்கு பில் அமவுண்ட் கம்மியாகவும், கஸ்டமர்ஸ் மரியாதை இல்லாம ஹார்ஷா ஆர்டர் பண்ணா அவுங்குளுக்கு பில் அமவுண்ட் அதிகமாகவும் இருக்கும். இந்த ரூல்ஸ ‘சாய் ஸ்டாப்’ அவுங்களுடைய ரிசப்ஷன்லயே வச்சிருக்காங்க..

    இந்த ஐடியா வொர்க்-அவுட் ஆகுதானு கேக்கும்போது, இந்த ஐடியாவால் கஸ்டமர்ஸ் ஜாலியாகவும், சாஃப்டாகவும் எங்க எம்பிளாயிஸ்ட பேசுறாங்கனு சாய்- ஸ்டாப் ஓனர் உஸ்மான் தெரிவிச்சிருக்காரு.

    சாப்பாட்டு ‘பில்லை’ டிரெண்ட் ஆக்கிய நெட்டிசன்கள்; அப்படியென்ன இருக்கு அதுல?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....