Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மறுபடியும் முதல்ல இருந்தா? 48,500 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெற்றுள்ள கொடிய “ஜாம்பி வைரஸ்”!

    மறுபடியும் முதல்ல இருந்தா? 48,500 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெற்றுள்ள கொடிய “ஜாம்பி வைரஸ்”!

    ரஷ்யாவில் உறைந்த ஏரியின் அடியில் புதைக்கப்பட்டிருந்த 48,500 ஆண்டுகள் பழமையான “ஜாம்பி வைரஸை” பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது பலரிடையே மற்றொரு தொற்று நோயைப் பற்றிய அச்சத்தைத் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வைரஸ் அனைத்தும் தற்போது புத்துயிர் பெற்று தொற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பெர்மாஃப்ரோஸ்டில் இருந்து சேகரிக்கப்பட்ட பண்டைய மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் “ஜாம்பி வைரஸ்கள்” என்று பெயரிடப்பட்டுள்ள 13 புதிய நோய்க்கிருமிகளை புத்துயிர் அளித்து வகைப்படுத்தியுள்ளனர்., மேலும் அவை உறைந்த நிலத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக சிக்கியிருந்தாலும் அவை தொடர்ந்து தொற்றுநோயாக இருப்பதைக் உறுதிப்படுத்தியுள்ளதோடு ,மனிதர்களை தாக்கும் குணத்தை கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    “பண்டைய அறியப்படாத வைரஸின் மறுமலர்ச்சியால் ஏற்படும் தாவரங்கள், விலங்குகள் அல்லது மனித நோய்களின் விஷயத்தில் நிலைமை மிகவும் பேரழிவு தரும்” என்று அந்த ஆய்வு கூறுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கினறனர்.

    மேலும் அந்த ஆய்வில் வளிமண்டல வெப்பமயமாதல் காரணமாக பெர்மாஃப்ரோஸ்ட் உருகுவது, மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களை விடுவிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை மோசமாக்கும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். ஆனால் செயலற்ற நோய்க்கிருமிகளின் மீது அதன் விளைவு குறைவாகவே புரிந்து கொல்லப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, இதுபோன்ற வைரஸ்களை முன்கூட்டியே கண்டுபிடித்து ஆய்வு செய்ய விரும்புவதாகவும்,இதனால் இந்த தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கான வழியை கண்டறிய முடியும் எனவும் கூறுகின்றனர்.

    அதுமட்டுமின்றி இதுபோன்ற வைரஸ்கள் அமீபா போன்ற நுண்ணுயிரிகளைப் பாதிக்கும் திறன் கொண்டவையே தவிர ,மனிதர்களைப் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு எனவும் ,வேண்டுமானால் கொரோனா தோற்று போன்ற பொதுவான தொற்றாக மாற வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

    அதேபோல் இப்படியான ஒரு நிகழ்வு என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது ,இது ஒரு தீய சுழற்சி என்று கூட சொல்லலாம் .ஏனெனில் உருகும் பனியால் வெளியிடப்படும் கரிமப் பொருட்கள் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகியவற்றில் சிதைந்து, பசுமை இல்ல விளைவை மேம்படுத்தி உருகுவதை துரிதப்படுத்துவதால் ,புதிதாகக் கரைக்கப்பட்ட வைரஸ் தொற்றுநோயியல் பனிப்பாறையின் முனையாக மட்டுமே இருக்கக்கூடும் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவிக்கிறது. மேலும் ஆர்டிக் பகுதியில் மக்கள் குடியேறினாலும் இந்த வைரஸ் தாக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகஆய்வாளர்கள் கூறுகின்றனர் .

    ஒளி, வெப்பம், ஆக்ஸிஜன் மற்றும் பிற வெளிப்புற சுற்றுச்சூழல் மாதிரிகள் வெளிப்படும் போது இந்த அறியப்படாத வைரஸ்களின் தொற்று அளவை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....